Vஈரோடு: வேளாண் பொருட்கள் விற்பனை!

public

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.9.58 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் விற்பனையாகியுள்ளன.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பூதம்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி பல்வேறு வேளாண் பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன. அன்றைய ஏலத்தில் தேங்காய் ஒன்று ரூ.8.40 முதல் ரூ.16.7 வரையிலும், தேங்காய் பருப்பு ரூ.89.96 முதல் ரூ.132.10 வரையிலும், நிலக்கடலை கிலோ ஒன்றுக்கு ரூ.37.50 முதல் ரூ,44.60 வரையிலும், மக்காச்சோளம் ரூ.12.71 முதல் ரூ.13.29 வரையிலும், எள் ரூ.77.49 முதல் ரூ.86.20 வரையிலும் விற்பனையானது. ஆக மொத்தம் ரூ.9.58 லட்சத்திற்கு வேளாண் பொருட்கள் விற்பனையாகியுள்ளன.

சென்ற வாரம் நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் ரூ.5,02,000க்கு வேளாண் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டன. அந்த ஏலத்தில் விற்பனைக்காகக் கொண்டுவரப்பட்டிருந்த 24,000 தேங்காய்கள் மொத்தம் ரூ.2,75,000க்கு விற்பனையாயின. அதேபோல, 18 மூட்டைக் கொப்பரை தேங்காய்கள் மொத்தம் ரூ.1 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், 13 மூட்டைகள் அளவிலான வெள்ளை எள் மொத்தம் ரூ.1.5 லட்சத்திற்கும், 25 மூட்டை மக்காச்சோளம் ரூ.25,000க்கும், 4 மூட்டை ஆமணக்கு ரூ.12,000க்கும் விற்பனையானது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *