2017ஆம் ஆண்டு வெற்றி பெற்ற இட் படத்தைத் தொடர்ந்து இட்2 டிரெய்லர் வெளியாகியுள்ளது.
திகில், புனைவு சார்ந்த கதைகளுக்கு பெயர் பெற்ற ஸ்டீபன் கிங் எழுதிய திகில் நாவலே இட். ஒரு சிறிய டவுனில், கதை நிகழும் 27 வருடங்களுக்கு முன்பாக இட் என அழைக்கப்படும் குழந்தைகளைக் கொல்லும் கோமாளி வேடமணிந்த பேயை , ‘லூசர்ஸ் கிளப்’என அழைக்கப்படும் 7 சிறுவர்கள் அழிக்கிறார்கள். இது முதல் பாகமான இட்.
அதன் பின், வெவ்வேறு திசைகளுக்கு செல்லும் அவர்கள், அதே 27 வருடங்களுக்குப் பின் மீண்டும் வரும் இட் பேயால், தங்கள் டவுனுக்கு வரவழைக்கப்படுகிறார்கள். அவர்களின் வருகைக்கு காத்திருக்கும் இட் அவர்களை கொல்வதற்காக நிகழ்த்தும் வேட்டையும், தப்பிக்க அவர்கள் படும் போராட்டமே இட் 2. இதன் டிரெய்லர் பார்ப்பவர்களை உறைய வைக்கும்படி திகிலாக உருவாக்கப்பட்டிருக்கிறது.
முதல் பாகத்தை இயக்கிய ஆண்டி மஷ்சிட்டி-யே இப்பாகத்தையும் இயக்கியிருக்கிறார். ஜேம்ஸ் மெவாய், ஜெசிகா சாச்டின் போன்ற முக்கியமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். நியூ லைன் சினிமாஸ் தயாரித்திருக்கும் படத்தை வார்னர் பிரதர்ஸ் செப்டம்பர் 6ஆம் தேதி வெளியிடுகிறது.
[இட் 2 டிரெய்லர்](https://www.youtube.com/watch?v=GNx9EDsDeOA)
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: சசிகலா நடத்திய மெகா குடும்ப பஞ்சாயத்து!](https://minnambalam.com/k/2019/07/19/85)**
**[பிக் பாஸ் 3: ஜஸ்ட் லைக் தட் சிறுசுகள்!](https://minnambalam.com/k/2019/07/19/9)**
**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்! – 2](https://minnambalam.com/k/2019/07/13/54)**
�,”