‘பாகுபலி 2’ படம் தந்த வரவேற்பில் உலகம் முழுதும் அறியப்பட்ட அனுஷ்காவின் நடிப்பில் பரபரப்பாக உருவாகிவரும் படம் ‘பாகமதி’. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அனுஷ்காவின் பிறந்த நாளை (நவம்பர் 7) முன்னிட்டு இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அட்வான்ஸ் கிஃப்டாக நேற்று (நவம்பர் 6) மாலை வெளியிட்டுள்ளது படக் குழு. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் தயாராகிவரும் இந்தப் படத்தை ஜி.அசோக் இயக்கி வருகிறார். முக்கிய வேடங்களில் ஆதி, ஜெயராம், உன்னி முகுந்தன், ஆஷா சரத் ஆகியோர் நடித்துள்ளனர்.
தமன் இசையமைத்துவரும் இதற்கு மதி ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனை ‘UV கிரியேஷன்ஸ் – ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனங்கள் இணைந்து மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றன. தமிழ் சினிமாவில் தற்போது ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் ஹாரர் ஜானரில் இப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து, தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
‘பாகுபலி’ படத்தைப் போல அதிக கிராஃபிக்ஸ் காட்சிகளால் உருவாகிவரும் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு (2018) ஜனவரி மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
[பாகமதி போஸ்டர்](https://twitter.com/UV_Creations/status/927512186468974592)�,