ள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் இந்த நாட்டு ஊத்தப்பத்தை காலை நேர சிற்றுண்டியாக உண்ணும்போது அந்த நாள் முழுவதும் நல்ல புத்துணர்வாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். நம் உடலுக்கு வேண்டிய கார்போ-ஹைட்ரேட், வைட்டமின் சி போன்ற சத்துகள் இந்த நாட்டு ஊத்தப்பத்தில் நிறைந்துள்ளன.
**என்ன தேவை?**
இட்லி அரிசி – ஒரு கப்
பச்சரிசி – ஒன்றரை கப்
உளுந்து – முக்கால் கப்
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – ஒன்று
பெரிய வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
துருவிய கேரட் – ஒன்று
நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு
இட்லிப்பொடி – சிறிதளவு
**எப்படிச் செய்வது?**
ஊத்தப்ப மாவு தயாரிக்க அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஆறு மணி நேரம் ஊறவைத்து அரைத்து உப்பு கலந்து புளிக்கவைத்து எடுக்கவும். பிறகு சூடான தோசைக்கல்லில் மாவைச் சிறிது கெட்டியான ஊத்தப்பமாக இட்டு அதன்மீது பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி, கேரட், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து அதன்மீது இட்லிப்பொடி சிறிது தூவி நல்லெண்ணெய்விட்டு மூடி போட்டு சிறு தீயில் வைத்து சுட்டெடுத்தால் அருமையான நாட்டு ஊத்தப்பம் தயார்.
**[நேற்றைய ரெசிப்பி – கொண்டைக்கடலை சாதம்](https://minnambalam.com/public/2022/06/10/1/Chickpea-rice)**
.