�
வயது 40-ஐ கடந்தவர்களும் எடைக்குறைப்பு முயற்சியில் சட்டென்று இறங்குபவர்களும் முதல் முயற்சியாக சர்க்கரைக்கு பதில் நாட்டுச் சர்க்கரைக்கு அல்லது தேனுக்கு மாற நினைப்பது இப்போது அதிகரித்து வருகிறது. இது சரியா?
நேற்றுவரை சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டே பழகியிருப்பார்கள். வெயிட்டை குறைக்கிறேன் என்ற பெயரில் இன்று வெள்ளை சர்க்கரைக்கு பதில், நாட்டுச் சர்க்கரைக்கு அல்லது தேனுக்கு மாறுவார்கள். வெள்ளை சர்க்கரை என்பது அதிக இனிப்புச்சுவையைக் கொண்டது. அதனுடன் ஒப்பிடும்போது தேனில், நாட்டுச் சர்க்கரையில் இனிப்புச்சுவை குறைவாக இருக்கும்.
அந்த இனிப்பு சுவை போதாமல் சர்க்கரையைவிட, தேன் – நாட்டுச் சர்க்கரை ஆரோக்கியமானதுதானே என நினைத்துக்கொண்டு இரண்டு, மூன்று டீஸ்பூன் என அவர்கள் பழகிய அந்த இனிப்பு சுவை வரும்வரை சேர்த்துக்கொள்வார்கள். அதன் விளைவாக கலோரி அதிகரிக்கும். எடை குறையாது.
எனவே, இப்படியான அதிரடி நடவடிக்கைகளைத் தவிர்த்து முதலில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையை, முக்கால் டீஸ்பூனாகக் குறையுங்கள். ஒரு வாரம் கழித்து, அதை அரை டீஸ்பூனாக குறையுங்கள். இப்படி படிப்படியாகக் குறைக்கும்போது, ஒரு கட்டத்தில் அதற்கு நீங்கள் பழகிவிடுவீர்கள். அதன் பிறகு நாட்டுச் சர்க்கரைக்கோ, தேனுக்கோ மாறலாம்.
அது உங்களுக்கு எளிதாக இருக்கும். மற்றபடி சர்க்கரையோடு ஒப்பிடும்போது நாட்டுச்சர்க்கரை, தேன் போன்றவை ஆரோக்கியமானவையே” என்கிறார்கள் டயட்டீஷியன்கள்.
**[நேற்றைய ரெசிப்பி: நண்டு மசால்](https://minnambalam.com/public/2021/10/23/1/crab-masala)**
.�,”