“என்ன இது சின்னபுள்ளத்தனமா இருக்கு? இருக்கட்டும் இருக்கட்டும் வெச்சிக்கிறேன் இந்த ஆள”..என்றபடி வீட்டுக்குள் நுழைந்த அம்மாவை குழப்பமாகப் பார்த்தான் குமார். “என்னம்மா பிரச்னை? காய் வாங்கிட்டு வரதுக்குள்ள கொதிச்சு போய் வர்ற?”, என்று கேட்டான். “இத்தன வருசமா நான் தானடா இந்த வீட்டுக்கு காய் வாங்கிட்டு வர்றேன்?”, என்று பஞ்சாயத்தை ஆரம்பித்தாள். “ஆமாம்மா ஆமா..யார் இல்லைன்னா?” என்றான் குமார். “உங்கப்பா நான் மார்கெட்ல நின்னுட்டு இருந்தப்ப வந்தார்டா.. வீடு வரைக்கும் வண்டியில செத்த கொண்டு போய் விட்ருங்க, வெயிலா இருக்குன்னு சொன்னேன். முனகிக்கிட்டே கூட்டிட்டு வந்து விட்டாரு. இறங்கி நின்னா பக்கத்து தெரு கோவாலு வந்தானா..என்னண்ணே காய் வாங்கியாறீங்களான்னு கேட்டான். இவ வாங்கிட்டு வந்தா நான் வீட்டுல கொண்டாந்து விட்டேன்னு சொல்ல வேண்டியது தான? ஆனா இந்த மனுஷன் சலிச்சுக்கிட்டே, டெய்லி இது ஒரு வேலையா இருக்கு, நான் தான் மார்கெட்டுக்கும் போய்ட்டு, வேலைக்கும் போய்ட்டுன்னு வேலை ஒழிய மட்டேங்குதுன்னு பச்சப் புளுகு புளுகுறார்டா…வரட்டும் இன்னிக்கு அந்த ஆள வெட்டிப் பொலி போட்டுர்றேன்”,என்று சீறியவளைப் பார்த்து சிரித்தான் குமார்.
“யம்மா..நம்ம அப்பா பாஜக அறிக்கை மாதிரி வேலை செய்றாரு. ஓபிசி ரிசர்வேஷன் வேணும்னு கேட்டு கேசு குடுத்து வாதாடி ஜெயிச்சது திமுக. தொடர்ச்சியா இதைப் பத்தி மக்கள் கிட்ட பேசினது திமுகவும் விசிகவும். ஆனா பாருங்க, கோர்ட்டு திமுகவுக்கு ஆதரவா தீர்ப்பு சொன்னவுடனே, நான் தான் நான் தான் அப்டின்னு அறிக்கை விட்டிருக்கு பாஜக. அப்டித்தான்மா நம்ம அப்பாவும். எங்க யாருக்கு என்ன நடந்தாலும் அது தன்னால தான் நடக்குதுன்னு நம்புறது ஒரு மன நோய்மா..நீ ஏன் அப்பாவை ஒரு நல்ல டாக்டர் கிட்ட கூட்டிட்டு போகக்கூடாது?”, என்று கேட்டான் குமார். “அடப்பாவி ஒரு வார்த்தை உங்க அப்பனைப் பத்தி குறை சொன்னதுக்கு மென்டல் ஆஸ்பத்திரிக்கு அனுப்புற..படவா”, என்ற அம்மாவிடமிருந்து தப்பி ஓடினான் குமார்.
நம்ம அப்டேட்ட பார்ப்போம்…
**சப்பாணி**
அட்வைஸ் செய்பவர்களை கூட நம்பலாம்.அட்வைஸ் கேட்பதுபோல நடிப்பவர்களை நம்பக்கூடாது
அய்யா குடை புடிச்சு போற இயற்கை விவசாயி வணக்கம்ங்க???????????? pic.twitter.com/IIvsQnVyiz
— ⭐ ஜால்ரா காக்கா⭐ (@krishnaskyblue) July 27, 2020
**மெத்தவீட்டான்**
அண்ணாமலை ஆடு வளர்க்குறாரு அவரை பாஜக வளர்க்குது !
ஜனகராஜ் ???????????????????????? pic.twitter.com/LXJSEGttWz
— கார்த்திக் சுப்புராஜ் (@Asuran_Talkssss) July 27, 2020
**இதயவன்**
மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்பாக மத்திய அரசு உடனடியாக ‘சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு – 2020’ – ஐ திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” # சரத்குமார் அவரும் அரசியல்ல இருக்கிறேன்ங்கிறத காட்டிகிறாராமாம்?!!
Me: https://t.co/rttpU3ebc0 pic.twitter.com/o8u6QbfzhR
— இட்லி (@Raittuvidu) July 28, 2020
**ஜோக்கர்**
ஆடு ~ இயற்கை விவசாயம், மக்கள் சேவை, அப்படியே CM.. சீமான் ~ எத்தனை வருஷமா கூழ் ஊத்துற??! ஆடு ~ இப்போதான்.. சீமான் ~ நாங்க பல வருஷமா கூழ் ஊத்திட்டு இருக்கோம்.. நீ கிளம்பு..!!
this is funny asf HAHAHAHHA pic.twitter.com/KYfGHrEnl2
— syamieonz (@syamieomieonz) July 26, 2020
**கறுப்பு மன்னன்**
காவி என்பது தீவிரவாதத்தின் அடையாளம் கிடையாது. அது இறைவனின் அடையாளம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை இறைவனாக நினைத்துப் காவித் துண்டைப் போட்டிருப்பார். – ராஜேந்திர பாலாஜி H.ராஜா : விட்டா என்னையே துன்னுடுவான் போலயே!!!
**கோழியின் கிறுக்கல்**
மனைவி கேட்கும் பல கேள்விகளுக்கு, ஐயன் வள்ளுவனின் “பொய்மையும் வாய்மை இடத்து” எனும் குறளின் அடிப்படையில் பதில் அளிப்பதாலேயே குடும்பம் வண்டி சுமூகமாக ஓடிக் கொண்டிருக்கிறது!! உதா: சாப்பாடு எப்படி இருக்கு? இந்த ட்ரஸ் எனக்கு எப்படி இருக்கு!?
**லாக் ஆஃப்**
�,”