zஆண்டவர் அன்னைக்கே சொன்னாருடா: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

பழைய சாதத்தில கொஞ்சமா கெட்டி தயிர ஊத்தி மேலாப்புல உப்ப தூவி சைட்ல காரமா கொஞ்சம் ஊறுகாவ வச்சு, நேத்து வச்ச மீன் கொழம்போட சேத்து சாப்பிட்டா, அட…அட..அந்த சுவையே அலாதி தான்பா. இன்னைக்கு எனக்கு லஞ்ச் கூட பழைய சாதம் தான். வீட்ல இல்ல ஹோட்டல்ல. பில்லு 140 ரூபா வித்து ஜிஎஸ்டி. ஆனாலும் அந்த டேஸ்டுக்காக எவ்வளவு வேணா கொடுக்கலாம்பா. சாப்பிட்டு வெளிய வந்து மழைக்கு ஒதுங்கினா, அங்க ஒருத்தர் வீடியோ ஒண்ண காட்டி பக்கத்தில இருக்கிறவர் கிட்ட சொல்றாரு, “அடுத்த சிஎம் கமல் தாண்டா. பாரு முப்பது வர்ஷதுக்கு முன்னாடியே மகாராஷ்டிராவில சிஎம் சீட்டுக்கு பிரச்ன வரும்னு தெரிஞ்சிகிட்டு பேசுறாரு. அந்த சக்தி இருக்கிறதால தான் அவர ஆண்டவர்னு சொல்றாங்க”ன்னு புதுசா ஒரு விளக்கத்த கொடுக்குறாரு. நான் அது காதில விழாத மாதிரி ரியாக்‌ஷனே கொடுக்காம அமைதியா நின்னுட்டு வந்தேன். நீங்க அப்டேட்ட படிங்க

**Bharathi Nathan**

டீக்கடையில ‘நித்தியோட பாஸ்போர்ட்டை தான் நீதிமன்றம் முடக்கிடுச்சே, எப்படி வெளிநாடுபோனாரு’ன்னு ஒருத்தர் கேட்க, இன்னொருத்தர் ‘அவுரு எங்க வெளிநாடு போனாரு? தேவலோகம் போயிருக்காரு. தேவர்களையெல்லாம் நலம் விசாரிச்சுட்டு சீக்கிரம் வந்துடுவாரு’ ன்னு சொல்றாரு.

**சிலந்தி**

யார் காலை பிடித்தால் காரியம் நடக்கும் என்பதையும்..

அதே சமயம் யார் காலை வாரினால் காரியம் முடியும் என்பதையும் நன்றாக தெரிந்து வைத்திருக்கிறார்கள்..!!

**SHIVA SWAMY.P**

உன்னை தாக்க முயல்பவனைவிட அதை தடுக்க மறுப்பவனும் கொடூரமானவனாகத்தான் இருப்பான்…!!!

**ச ப் பா ணி**

ஆறுவது சினம்

ஆறாதது ஈகோ

**கோழியின் கிறுக்கல்!!**

ஒரு வேலையும்,

பல வேலையில்லா பட்டதாரிகளும்!!

**எனக்கொரு டவுட்டு ⁉**

பார்சல் சாப்பாடுகளில் அப்பளம் என்பது டீஸு பேப்பராகவே பார்க்கப்படுகிறது 🙂

**நவீணா**

தொலைந்த அத்தனையிலும்

நிம்மதியின் சாயல்..

தொலைத்த அத்தனையிலும்

துரோகத்தின் சாயல்..

**ச ப் பா ணி**

குளிர்ச்சியை சீதளம் என்று சொல்வார்கள்.அதிலிருந்து தான் ஒரு பழத்திற்கு சீதா பழம் என்று பெயர் வந்திருக்கிறது.பின்னால் அது சீதை விரும்பி உண்ட பழம் என்று கதை கட்டிவிட்டார்கள் தவறாக.

**பாட்டி வைத்தியம்**

செம்பு காப்பு அணிவது என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கமாகும். செம்பு காப்பு அணிவது நமது சருமத்திற்கும், இரத்த ஓட்டத்திற்கும் மிகவும் அவசியமானது என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளார்கள்

**கோழியின் கிறுக்கல்!!**

ஜிம்ல சேர்ந்த உடனே Armsஐ பார்ப்பதற்கும்,

வாக்கிங் போக ஆரம்பித்ததும் தொப்பையை தடவி பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை!!!

**கோழியின் கிறுக்கல்!!**

ஒரு பெண் கடைக்குள் நுழைந்த ஐந்து நிமிடத்திற்குள் புடவையை தேர்ந்தெடுக்கிறார் எனில் அது கண்டிப்பாக மாமியாருக்கோ, நாத்தனாருக்காகவோ தான் இருக்கும்!!

**Fathima Muhammad**

உற்று நோக்குங்கள்

“சவால்” என்ற வார்த்தைக்குள்

“வாசல்” மறைந்து இருக்கிறது

ஒவ்வொரு சவாலும் வெற்றி வாசலை திறக்க காத்து இருக்கிறது ..

**இதயவன்**

பெரும்பாலனவர்களின் “ஹெல்மெட்”யை ‘

பெட்ரோல் டேங்க்’களே

அதிகம் சுமக்கின்றன!!!

**டீ இன்னும் வரலை**

மனைவியிடம் தோற்கும் ஆண்

வாழ்க்கையில் ஜெயிக்கிறான்…

அப்படின்னா…

கணவனிடம் ஜெயிக்கும் மனைவி

வாழ்க்கையில் தோத்துருவாங்களா

**முகமூடி**

ஒரு தட்டு தட்டினால் வேலை நடக்கும் என்பதை டீவி ரிமோட்டிலிருந்து கண்டுபிடித்திருப்பார்கள் போல..!!

-லாக் ஆஃப்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share