அடுத்த வாட்டி அப்படி ஊரே இல்லன்னுவாங்க: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

‘அன்னைக்கு என்னடாண்ணா ‘கோயம்பத்தூரில அப்பாவி பொண்ணுக்கு ஆக்ஸிடண்ட் ஆனபோது, கொடிக்கம்பம் விழுந்து இப்படியாச்சே தப்பில்லையா சார்?’ன்னு நம்ம சிஎம் கிட்ட கேட்டா, கோர்ட்டில பேனர் தானே வைக்க கூடாதுன்னு சொன்னாங்க, கொடிக்கம்பம் இல்லையேன்னு அவரு சொல்லிட்டு போய்ட்டாரு. இன்னைக்கு என்னடாண்ணா அங்க கொடிக்கம்பமே இல்லேன்னு சொல்றாய்ங்க. அடுத்த வாட்டி பாரு கோயம்பத்தூருன்னு ஒரு ஊரே இல்லன்னு கூட சொன்னா கூட ஆச்சரியப்படுறதுக்கு இல்ல’. இத எல்லாம் நான் சொல்லலப்பா, நியூஸப் பாத்திட்டு ரோட்டில ஒருத்தர் சொல்லிட்டு போறாரு. நாம இருக்குற இடம் தெரியாம இருந்திட்டு போவோம். நீங்க அப்டேட்ட படிங்க,

**இதயவன்**

2021 ல் அதிமுகவே

ஆட்சியை பிடிக்கும் ரஜினி அந்த அதிசயத்தை தான் சொல்கிறார் போல

எடப்பாடி

அப்ப உங்களுக்கே தெரியுது திருப்பி நீங்க ஆட்சிக்கு வந்தா பெரிய அதிசயம் னு ?!!

**கோழியின் கிறுக்கல்**

விடுதி வாழ்வின் கொடூரங்களில் முக்கியமானது,

உடல்நிலை சரியில்லாத பொழுது தன்னை தானே கவனித்துக் கொள்வது தான்!!

**பாட்டி வைத்தியம்**

சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தா விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.

**இதயவன்**

உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கான அவசர சட்டத்துக்கு சரத் குமார் ஆதரவு – செய்தி

எதுக்கு ஏன்னு தெரியாம எல்லாதுக்கும் ஆதரவு தருவதால் இன்றுமுதல் அதிமுக ஆதரவு குமார்

என அழைக்கபடுவீர் ?

**செந்திலின்_கிறுக்கல்கள்**

ரஜினி, கமலை விட அரசியலில் நான் தான் சீனியர் – டி.ராஜேந்தர்

என்ன பண்றது தாடிய வளர்த்த அளவுக்கு கட்சிய வளர்க்கலையே ப்ரோ!?

**ச ப் பா ணி**

ஹலோ என்றபோது

ராங் நம்பர் என்றார்

எதிரே வந்தவர்

**ச.ரா…எதார்த்தமானவள்**

நம்மையும் ..

நம் உணர்வுகளையும் ..

நம் கனவுகளையும்..

மதிக்கிற உறவுகளை நாம்

எப்போதும் இழந்திட கூடாது ..

**ச ப் பா ணி**

வீழ்வது நாமாக இருப்பது இருப்பினும், சேதாரமாகாமல் இருப்பது செல்போனாக இருக்கட்டும்.!!

**சுபாஷினிBAS**

உளுந்து கிலோ ரூ 100-ஐ தாண்டியது…!

வெங்காயம் கிலோ 100 ஐ தாண்டியது..!

இங்கு அதிசயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது

**சுபாஜி**

மரியாதை

இல்லாத இடங்களில்

கால்வைப்பது என்பது

கண்ணிவெடியில் கால்

வைத்தற்கு சமம்..!!!

**மித்ரன்**

மக்களுக்காக போராடி நான் 7 முறை சிறை சென்றுள்ளேன்; ரஜினியும் கமலும் இதுவரை மக்களுக்காக போராடி சிறை சென்றுள்ளனரா? – அமைச்சர் ஜெயக்குமார்

ரஜினி,கமல் நவ்: எவ்வளவு ட்ரிக்ஸா கோர்த்து விடுறீங்க டைசன்..?!

**கார்த்திக் தமிழன்**

“குடும்பத்திற்காக ஓடுகிறேன்” என்று சொல்பவர்கள் குடும்பத்தை விட்டும் ஓடிக்கொண்டிருக்கிறோம் என்பதை மறந்து ஓடிக்கொண்டிருக்கிறார்கள்…!!!

-லாக் ஆஃப்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share