jஅடுத்த ரெய்டு எங்க சார்?: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

‘மச்சான் குமாரு, பாத்தியாடா கொல்கத்தால ரெயிடு வந்துட்டாய்ங்கன்னு பணத்த பூரா மாடில இருந்து கீழ கொட்டி இருக்காய்ங்க. நம்ம ஊர்ல எல்லாம் இப்படி நடக்க வாய்ப்பே இல்லையாடா’னு டீக்கடைல என் ஃப்ரெண்டு கேட்டான் ‘அட நீ வேற தம்பி, நம்ம ஊருகாரங்க காச எதுக்கு ரோட்டில கொட்டப் போறாய்ங்க, ஒண்ணு ரெய்டுக்கு வந்த ஆபிஸர கரெக்ட் பண்ண முடியுமான்னு ரூட்டு தேடுவாய்ங்க. இல்லேன்னா கோவில் உண்டியலில் கோடி பணம்னு நியூஸ் வர்ற மாதிரி எதாவது பண்ணுவாய்ங்க’ன்னு ஸ்டைலா டீய ஆத்திகிட்டே டீக்கடை அண்ணா சொல்றாரு. நான் என்னடாண்ணா வயத்து வலில பேசாம அமைதியா இருந்தேன். விஷயத்த ஃப்ரெண்டு கிட்ட சொன்னா, ‘ஹாஸ்பிட்டல் போறதா இருந்தா நல்ல இடமா பாத்து போடா, ஊசிய எல்லாம் உள்ள வச்சு தைக்கிறாங்கன்னு’ சொல்லி பீதிய கெளப்புறான். இவனுங்க பண்றத பாத்தா, வயித்து வலிக்கு இலவச இணைப்பா நெஞ்சு வலியும் வந்திரும் போலயே. நான் போய் ஒரு துண்டு இஞ்சிய தின்னுட்டுத் தூங்குறேன். நீங்க அப்டேட்ட படிங்க.

**யுகராஜேஸ்**

அமெரிக்க பயணத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேறியது- OPS

அந்த…அஞ்சு விருதையும் நான் சொன்ன மாதிரியே கரெக்ட்டா கொடுத்திட்டானுங்கன்னு சொல்லுறாரு போல..!!

**தமிழ்ச்செல்வி**

பிறருக்கு கொடுப்பதற்கு

எதுவும் இல்லை என்றாலும்

அன்பான கனிவான வார்த்தைகளையாவாது

கொடுங்களேன்..

**நடை பாதை**

பூட்டியிருந்தாலும் உள்ளே செல்வதற்கு

அனுமதி கேட்டதில்லை

எறும்புகள்..!

**மெத்த வீட்டான்**

ஆகச்சிறந்த பழிவாங்கல்

பழிவாங்காமல் விடுவது !

**மெந்நிலா**

கைத்தட்டுகிறார்கள் என்று நினைத்து அருகில் பறந்தேன் கொன்றுவிட்டார்கள்..!!

” கொசுவின் மரண வாக்குமூலம் “

**மித்ரன்**

ரஜினி, கமலை விட அரசியலில் நான் தான் சீனியர் – டி.ராஜேந்தர் #

கேப்டன் நவ்: ஏது? இங்க பேசிட்டு இருக்கோம்ங்க..?!

**மாங்குடிகணேஷ்**

ஏற்கனவே ஜெயலலிதா அப்பல்லோவுக்கு போனதுக்கு திமுக தான் காரணம் சொல்றானுங்க!

இப்ப! 1000 ஏக்கர் பற்றி கேட்டதும்! ‘ராமதாஸ் அப்பல்லோக்கு போயிட்டார்’

இதையும் திமுக கணக்குல சேர்த்து விடப்போறானுங்க

**Smiley Azam**

பழைய சோற்றை ஆர்டர் செய்து சாப்பிடுற அளவிற்கு நமது வருமானம் உயர வேண்டும்!!

**sɪʟᴇɴᴛ ғɪɢʜᴛᴇʀ**

கடும் முயற்சியின் விளைவும் தோல்வி என்றால், நீ முயற்சிக்கும் துறை உன்னுடைய ஆற்றலுக்கு பொருத்தமானதா என மீள் பரிசோதனை செய்து கொள்

**மாங்குடிகணேஷ்**

அதிமுகவில் மட்டும்தான் அடிமட்ட தொண்டனும் முதல்வராக முடியும் _ஓபிஎஸ்!

எம்.ஜி.ஆர். பிறகு மனைவி ஜானகி!

ஜானகிக்கு பிறகு ஜெயலலிதா!

‘பெரியம்மா சிறைக்கு போனதும் ஓபிஎஸ்!

‘சின்னம்மா சிறைக்கு போனதும் எடப்பாடி!

இதுல எங்க அடிமட்ட தொண்டன் வந்தான்?

**இதயவன்**

லந்த கொடுக்காதே டா -பிரச்சனை பண்ணாதே டா

இன்றளவும் மதுரையில் பேசபடுகிற வார்த்தை

**இதயவன்**

தொழிலில் மட்டுமே கவனம் செலுத்தும் டீசன்ட் நடிகர் அஜித்! – ஜெயக்குமார் புகழாரம்

எப்படி வருவாரு டைசன் அரசியலுக்கு,நீங்க தான் அரசியல்யே தொழிலாக்கி வைச்சி இருக்குறீங்களே?!!!

-லாக் ஆஃப்

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share