‘கடைசி வரைக்கும் நம்பிக்கையோட இருந்தோம்டா, குழந்தைய காப்பாத்த முடியலயே..இனியாச்சும் இப்படி யாரையும் விட்டிரக் கூடாது குமாரு’ன்னு டீக்கடைல மச்சான் ஒருத்தன் மனசு ஒடஞ்சுபோய் சொல்லிட்டு இருந்தான். பக்கத்தில இருந்த ஒருத்தர் வாண்டடா வந்து ‘இனி நடக்காது தம்பி, இந்த மாதிரி யாரச்சும் பெரிய குழிக்குள்ள வுழுந்தா அவங்களக் காப்பாத்துற மெஷின கண்டுபுடிங்கன்னு போட்டி நடத்தப் போறாய்ங்களாம். ஜெயிச்சா அஞ்சு லட்சம் பரிசாம்பா’ன்னு ஆச்சரியமா சொல்றாரு. ‘சந்தோஷம் அண்ணே, இனிமே யாரும் இப்பிடி குழிக்குள்ள விழாத மாதிரி பாத்துக்கலாமே’ன்னு பொறுமையா சொன்னான். ‘அது எப்படிப்பா, ஊர் உலகத்தில நடக்காததா இது. ஏன் சைனா, அமெரிக்கால எல்லாம் கூட நடந்திருக்கு’ன்னு அந்த அண்ணன் சொல்ல. ‘ஆமாண்ணே…நடந்திருக்கு தான் 32 வர்ஷம் முன்னாடி அமெரிக்காவில ஒருத்தங்க உள்ள விழுந்திட்டாங்க. அவங்களையும் காப்பாத்திட்டாங்க. அது தான் முதலும் கடைசியும்’ன்னு பதில சொல்லிட்டு அமைதியா கெளம்பிட்டோம். நீங்க அப்டேட்ட படிங்க.
**தமிழ்ச்செல்வி**
கடந்து போகக் கற்றுக் கொள்
மாயமான இந்த உலகில்
காயங்களுக்கு நியாயங்கள்
தேடாமல்..??
**இதயவன்**
தமிழகத்தில் தீபாவளி மது விற்பனை ரூ. 455 கோடி! _செய்தி!
தப்பு பண்ணிட்டிங்க
அப்படியே குடித்துவிட்டு வெளியே வர்றவங்களை டிரங்க் அன் டிரைவ்ல பைன் அடிச்சி இருக்கலாம் இன்னும் வசூல் ஆயிருக்கும்
**Janakiraman**
குழந்தைகளைக் கவர பெரிசாவொன்னும் செய்யவேணாம்.காகிதக்
கப்பல்செய்துகொடுத்தாப்
போதும்.
**ச ப் பா ணி**
பெண்களின் அழுகை பலவீனமாக புரிந்துகொள்ளப்படுகிறது. உண்மையில் அது கோபத்தின் வெளிப்பாடு. ‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்’ என்பது வள்ளுவர் வாக்கு. ஆண்களை போல் கோபப்பட்டு வன்முறையில் இறங்காமல் ஆற்றாமையில் அழுகிறாள் பெண்
இனுக்கு அவங்க அம்மா முத்தம் தராமல் ஆபீஸ் போய் விட்டாங்களாம்.
அவனது தந்தை வந்தவுடன் அவரிடம் அவன் அம்மா முத்தம் தராமல் ஆபீஸ் போய் விட்டதாக புகார் கொடுக்கிறான்
???????? pic.twitter.com/Bt5jENgYy6
— Mr.A.PARIMALAM (@IlovemyNOAH2019) October 22, 2019
**பாட்டி வைத்தியம்**
காளான் தொடர்ந்து சாப்பிடுவதால் சிறந்த பலன் தரும். குறிப்பாக சிறுநீரகத்திற்கு நல்லது. காளான் சாப்பிடுபவர்களுக்கு உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துகிறது
**திவாகரன்**
மேல ஏறுறது மட்டுமில்ல, கீழ இறங்குறதும் முக்கியம் தான்.
இந்த வருஷம் ரெண்டுலயுமே தோத்துட்டோம்ல
**நட்சத்திரா**
எந்த பங்சன்க்கு போனாலும் வராதவங்கள மட்டும் ரொம்ப பாசமா விசாரிக்கறது டிசைன்ல இருக்கும் போல
**Dr.அ ல ர்**
எவ்வளவு முயன்றாலும்
காமிரா முன்
புன்னகை செயற்கையாகிறது
எப்படித் தவிர்த்தாலும்
கண்ணாடி முன்
புன்னகைக்கத் தோன்றுகிறது
மன தைரியத்திற்கு முன்னால் படிப்பு என்னங்க பெரிய படிப்பு ..!! pic.twitter.com/BqjrGKkZ1Q
— ஆர்வக்கோளாறு™ ???????? (@motheen_farook) October 29, 2019
**ச ப் பா ணி**
முளைச்சு மூணு இலை விடல” அதுக்குள்ள என்ன என அடிக்கடி கேட்டிருக்கிறோம்.
மூணு இலை கணக்கு என்பது விதை முளைத்ததும் செடி நிச்சயம் பிழைத்துவிடும் என்ற நிலை. மூணாவது இலைவிட்ட பிறகு பராமரிப்பு இருந்தால் போதும். பேரிடர் வந்தாலொழிய அழியும். இல்லையேல் நன்கு வளரும் என்பதற்கான குறியீடு
**செல்லக்குட்டி தீபா**
அம்மா
அப்பா
-இரண்டுவரி கவிதை
**புகழ்**
“கடவுள் இருக்கான் குமாரு” என்பது
நமக்கு நல்லது நடக்கும்போது சொல்வதைவிட..நமக்கு ஆகாதவனுக்குக் கெடுதல் நடக்கும்போதே அதிகம் சொல்லப்படுகிறது..
**பெனாசிர்**
கண்ணு தெரியாதவங்க கூட அந்த குச்சியை வச்சு தட்டி தட்டி சாலையில் இருந்த அந்த ட்ரைனேஜ் ஓட்டையை தவிர்த்து செல்கிறார்கள், ஆனால் இவனுங்க இந்த செல்போனை பார்த்துக்கொண்டே கண்ணிருந்தும் குருடனாய் ட்ரைனேஜ் ஓட்டையிலும், குழியிலும் பள்ளத்திலும் விழுகிறார்கள்..
**சிலந்தி**
கூட யாராச்சும் வந்திருக்காங்களா என்ற டாக்டரின் கேள்விக்கு..
அந்த முதியவரின் மெளனம் நோயினும் கொடியது..!!
-லாக் ஆஃப்
�,”