wபண நெருக்கடி: வார இறுதிகளில் மூடப்படும் ஐ.நா!

public

ஐ.நா சபையின் தலைமையகம் பண பற்றாக்குறை காரணமாக வார இறுதிகளில் மூடப்பட உள்ளதாக அதன் தலைமை அறிவித்துள்ளது.

ஐ.நா பட்ஜெட்டுக்காக பணம் வழங்கிய நாடுகளின் விவரம் பற்றிய ஆவணத்தை வெளியிட்டுள்ள ஐ.நா அமைப்பு, வெளியிட்ட ஆவணத்தில், 131 உறுப்பு நாடுகள் தங்களது வழக்கமான பட்ஜெட் மதிப்பீடுகளை முழுமையாக செலுத்தியுள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது. இதில் 30 நாடுகள் மட்டுமே குறிப்பிட்ட காலத்துக்குள் முழு தொகையை செலுத்தி உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவுக்கான ஐ.நா. தூதர் சையத் அக்பரூதின் ஐ.நா.பட்ஜெட்டுக்கான முழு தொகையை செலுத்தும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏறக்குறைய கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு, ஐ.நா மிக மோசமான பண நெருக்கடியை எதிர்கொள்கிறது. இதுகுறித்து ஐ.நா தனது ட்விட்டர் பக்கத்தில், “நியூயார்க்கில் உள்ள ஐ. நாவின் தலைமையகம் பண பற்றாக்குறை காரணமாக இனி வார இறுதி நாட்களில் மூடப்படும்” என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக ஐ.நா. சபையில் ஏற்பட்டுள்ள பணப் பற்றாக்குறை காரணமாக கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை ஒத்திவைத்தல், செலவுகளைக் குறைத்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட இருக்கிறோம் என்றும் அதன் பொதுச் செயலாளர் அண்டோனியா குத்தேரெஸ் தெரிவித்திருந்தார். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஐ.நா பொதுச் செயலாளர் பணப் பற்றாக்குறையைப் போக்க உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால், உறுப்பு நாடுகள் வழங்க மறுத்துவிட்டன என்று ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *