gஊபர் அறிமுகப்படுத்தும் புதிய திட்டம்!

Published On:

| By Balaji

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில் புதிய சேவையை அறிமுகம் செய்யவிருப்பதாக ஊபர் டாக்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிக மக்கள்தொகை அதன் காரணமாகப் பெருகிவரும் போக்குவரத்து இவற்றுக்கு இடையில் பேருந்துகளிலும் ரயில்களிலும் தினசரி பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது அதிக பயத்தைத் தரும் ஒன்றாகவே மாறிவிட்டது. இவற்றின் நெரிசலுக்கு இடையில் சிக்கி, தினம் தினம் அல்லல்படுபவர்களுக்கு ஓலா, ஊபர் போன்ற கால் டாக்ஸி நிறுவனங்கள் மிகப்பெரிய ஆறுதலாக உள்ளன. ஆனால், அத்தகைய ஆட்டோ மற்றும் டாக்ஸிகளில் பயணம் செய்யும் பயணிகள் தங்களது பயணம் மற்றும் ஓட்டுநரின் நடத்தையில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக சில சமயங்களில் புகார்களையும் எழுப்பி வருகின்றனர்.

இதற்குத் தீர்வு காண, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும்படியான புதிய சேவைகளை அறிமுகம் செய்ய வேண்டும் என ஊபர் கால் டாக்ஸி நிறுவனம் திட்டமிட்டது. அதன்படி பயணத்தின்போது ஆடியோ ரெக்கார்டு செய்யும்படியான புதிய சேவையை அறிமுகம் செய்வதாக ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது. அமெரிக்காவில் அதிகாரபூர்வமாக இந்தச் சேவையை அறிமுகம் செய்யவிருக்கும் ஊபர் நிறுவனம் அதற்கு முன்னதாக பிரேசில் மற்றும் மெக்ஸிகோவில் சோதனை செய்யத் திட்டமிட்டுள்ளது.

இந்தச் சேவையின் மூலம் பயணம் செய்யும்போது பயணிகள் ஆடியோ ரெக்கார்டு செய்து அதைச் சேமித்து வைக்கலாம். பயணம் மேற்கொள்ளும் பயணியோ அல்லது வாகன ஓட்டியோ அந்த ரெக்கார்டிங்கைக் கேட்க முடியாது. பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஏதேனும் புகார் எழுப்பப்பட்டால், ஊபரின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு இந்த ஆடியோ ஆதாரத்தை அனுப்பலாம். அதன் மூலம் வாடிக்கையாளர்கள் விரைவில் தீர்வு தேட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனை முயற்சிக்குப் பின்னர் இந்தச் சேவை பிற நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என்று ஊபர் நிறுவனம் அறிவித்துள்ளது.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share