u‘8 தோட்டாக்கள்’ படக்குழுவின் அடுத்த தோட்டா!

Published On:

| By Balaji

‘8 தோட்டாக்கள்’ படக்குழுவின் அடுத்த தயாரிப்பான ‘ஜீவி’ படத்தின் டீஸர் நேற்று (மே 18) வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.

2017ஆம் ஆண்டு ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான ‘8 தோட்டாக்கள்’ திரைப்படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற படமாகும். வெற்றி, அபர்ணா பாலமுரளி, எம்.எஸ்.பாஸ்கர், நாசர் நடித்திருந்த இந்தப் படத்தை வெற்றிவேல் சரவணா சினிமாஸ், பிக் பிரின்ட் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்திருந்தன.

இதைத் தொடர்ந்து 8 தோட்டாக்கள் கதாநாயகன் வெற்றி நடிக்கும் ஜீவி என்ற படத்தை மீண்டும் அதே தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீஸரை ஆர்யா நேற்று (மே 18) மாலை வெளியிட்டுள்ளார்.

சமூகத்தின் மீதும் வாழ்வின் மீதும் விரக்தியடைந்த இளைஞன் ஒருவன் தன் திறமையைத் தவறான வழிகளில் பயன்படுத்த தொடங்குவது போல் உருவாகியிருக்கிறது இதன் டீஸர். ‘மாட்டிக்கிறதுக்கு ஒரு லிமிட் இருக்கு, ஆனா தப்பிக்கிறதுக்கு லிமிட்டேயில்லை’ என்ற வசனம் கவனிக்க வைக்கிறது. க்ரைம் த்ரில்லர் ரசிகர்களை ஈர்க்கும் படமாக இதன் டீஸர் வந்துள்ளது.

வெற்றி, கருணாகரன், ரோகினி, மைம் கோபி மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். கதை திரைக்கதையை பாபு தமிழ் எழுதியுள்ளார். பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு பிரவீன் கே.எல் படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார்.

[ஜீவி டீஸர்](https://www.youtube.com/watch?v=enLM8zybNEw)

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share