u3 ‘கான்’ நட்சத்திரங்கள் : அமீர்கான் கருத்து !

Published On:

| By Balaji

பாலிவுட் நடிகர் அமீர்கானின் நடிப்பில் இந்த ஆண்டு அக்டோபர் 19-ந் தேதி வெளியாகவிருக்கும் படம், ‘சீக்ரட் சூப்பர்ஸ்டார்’. இதன் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், நடிகர் அமீர்கான் கலந்து கொண்டார்.

அவரிடம் **அமீர் கான்,சல்மான் கான், ஷாருக் கான் போன்றவர்களின் படங்கள் வெளியாகி முதல் நான்கு நாட்களுக்குள் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் தற்போது சல்மான்கான் நடிப்பில் வெளியான டியூப்லைட்”, ஷாருக்கான் நடிப்பில் வெளியான “ஜப் ஹாரி மெட் சீஜல்” படங்கள் வணிகரீதியாக தோல்வியடையக் காரணம் டிரென்ட் மாறியதாலா?** என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்து பேசிய அமீர்கான்,

**இந்தி திரையுலகில் மிகவும் பிரபலமான, திறமைவாய்ந்த நடிகர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். ஆகையால், நட்சத்திரங்களாக மூன்று ‘கான்’ நடிகர்களை (ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான்) மட்டும் நினைப்பது நியாயமானது அல்ல. சமீபத்தில் அக்‌ஷய் குமாரின் நடிப்பில் வெளியான ‘டாய்லெட்: ஏக் பிரேம் கதா’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வணிகரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது.மேலும் அந்த படத்தை மக்கள் அனைவரும் ரசித்துப் பார்க்கிறார்கள். டிரென்ட் மாற்றம் என்பதை நான் ஏற்கமாட்டேன். படைப்பாளிகள் அனைவரும் ஏற்ற, இறக்கங்களைக் கடந்து தான் வர வேண்டும். நாங்கள் அனைவரும் எங்கள் வேலையைச் சிறப்பாக செய்வதற்கு முயற்சி செய்கிறோம். எங்கள் புதிய முயற்சியை ரசிகர்களும் விரும்புவார்கள் என்ற எண்ணத்தில் செய்கிறோம், ஆனால் அதில் சில சமயங்களில் வெற்றி பெறலாம். சில சமயங்களில் தோல்வி அடையலாம். இருந்தாலும் தோல்வியை கண்டு துவண்டு போய்விடக் கூடாது. நாம் நம்புகிற செயலில் வெற்றி பெற தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்** என்று கூறியுள்ளார்.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel