Uடி.வி.எஸ் : 2,11,470 வாகனங்கள் விற்பனை!

public

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 3.64 சதவிகித சரிவுடன் 2,11,470 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் கடந்த 2016ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 2,19,467 வாகனங்களை விற்பனை செய்திருந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த பிப்ரவரி மாதத்தில் 3.64 சதவிகித சரிவுடன் 2,11,470 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. இதில், இருசக்கர வாகன விற்பனை, 2.32 சதவிகிதம் குறைந்து, 2,06,247 ஆக சரிவடைந்துள்ளது. முந்தைய 2016 பிப்ரவரியில் விற்பனையான இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை 2,11,148 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, கடந்த மாதத்தில் உள்நாட்டில் விற்பனையான இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை, 1,72,611 (5.77 சதவிகித சரிவு). ஆனால், கடந்த 2016 பிப்ரவரி மாதத்தில் 1,83,199 வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மோட்டார் சைக்கிள் விற்பனை, 77,093லிருந்து 23.47 சதவிகிதம் சரிந்து 58,994 ஆக குறைந்துள்ளது. எனினும், ஸ்கூட்டர் விற்பனை, 67,089லிருந்து 2.9 சதவிகிதம் உயர்ந்து 69,020 ஆக அதிகரித்துள்ளது. மூன்று சக்கர வாகன விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதாவது, கடந்த 206ஆம் ஆண்டின் பிப்ரவரியில் 8,319 மூன்றுசக்கர வாகனங்கள் விற்பனையாகியிருந்த நிலையில், 2017 பிப்ரவரில், 5,223 மூன்றுசக்கர வாகனங்கள் மட்டுமே விற்பனையாகியிருக்கின்றன.

ஏற்றுமதியைப் பொருத்தவரையில், ஒட்டுமொத்தமாக 9.8 சதவிகித உயர்வுடன், 38,215 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டின் பிப்ரவரியில் 34,804 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *