uஹெல்த் ஹேமா: வறட்சியைத் தடுக்கும் பானங்கள்!

Published On:

| By Balaji

கோடையில் வெறும் குடிக்கும் நீரின் அளவை மட்டும் அதிகரிக்காமல், சற்று அத்தியாவசிய சத்துகள் கிடைக்கும்படியான பானங்களையும் பருக வேண்டும். பழங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துகள் கிடைப்பதோடு, கோடையில் சந்திக்கும் உடல் வெப்பம், வயிற்று எரிச்சல் போன்றவற்றில் இருந்தும் விடுபடலாம்.

**தயிர்**

வயிறு மற்றும் உடலைக் குளிர்ச்சியுடனும், உடலுக்கு வேண்டிய சத்துகளை உள்ளடக்கியும் இருக்கும் ஓர் உணவுப் பொருள்தான் தயிர். தயிரை கோடையில் தினமும் பருகிவந்தால், அதில் உள்ள இயற்கையான புரோபயோடிக்குகள் பல்வேறு நோய்கள் மற்றும் செரிமான பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும். அத்தகைய தயிரைக் கோடையில் குடிக்கலாம்.

**தர்பூசணி**

நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள இந்தப் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் இருக்கும் வெப்பமானது தணிவதோடு, உடல் வறட்சியும் நீங்கும்.

**வெள்ளரிக்காய்**

கோடையில் அதிகம் கிடைக்கும் உணவுப் பொருள்களில் வெள்ளரியும் ஒன்று. இதில் நீர்ச்சத்து அதிம் இருப்பதால், இது உடல் வறட்சியைக் குறைப்பதோடு, உடல் வெப்பத்தையும் தணிக்கும்.

**முலாம் பழம்**

உடல் வெப்பத்தைத் தணிக்கும் பழங்களில் முலாம் பழம் மிகவும் முக்கியமானது. இந்தப் பழம் மிகவும் குளிர்ச்சி தன்மை நிறைந்தது. இதை ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டால், சிலருக்கு அதில் உள்ள குளிர்ச்சியால் காய்ச்சல், இருமல் போன்றவை ஏற்படும்.

**முள்ளங்கி**

முள்ளங்கியில் அதிகப்படியான நீர்ச்சத்து இருப்பதோடு, வைட்டமின் சி என்னும் உடல் வெப்பத்தைக் குறைக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.

**கொய்யா**

கொய்யா பழத்தில் சட்னி, சிரப், ஜாம் மற்றும் ஜூஸ் தயாரித்துச் சாப்பிடுவதன் மூலம் பல நோய்களைக் கட்டுப்படுத்த முடியும். கொய்யா பழத்தை வெறும் வயிற்றில் உண்ணக் கூடாது. கொய்யாவின் தோலில் அதிக சத்துகள் உள்ளதால் தோலை நீக்கி சாப்பிடக் கூடாது. முகத்துக்குப் பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்கி, இளமை தோற்றத்தை தக்கவைக்க உதவுகிறது. உணவருந்துவதற்கு முன் இப்பழத்தைச் சாப்பிடக் கூடாது. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்துக்கு முன்போ சாப்பிடலாம்.

**சீரகம்**

சீரகத்தை இரவில் படுக்கும்போது சுடுநீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைக் காலையில் எழுந்து பருகிவந்தால், உடல் வெப்பம் குறையும்.

**இளநீர்**

உடல் வெப்பத்தைத் தணிப்பதில் இளநீருக்கு நிகர் எதுவும் இல்லை. அதிலும் இதைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் குளிர்ச்சியுடன் ஆரோக்கியமாக இருக்கும்.

**குளிர்ச்சியான பால்**

குளிர்ச்சியான பாலில் தேன் சேர்த்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும், உடல் வெப்பம் தணியும்.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share