காரணமே இல்லாம நாங்க எல்லாம் 90ஸ் கிட்ஸ், 80ஸ் கிட்ஸ்ன்னு காலரை தூக்கிவிடுறதுக்கு பதிலா இவங்க சொல்றதுக்கு நிறையா இருக்கு. ஸ்கூல் பீஸ் ஃப்ரீ, கவர்மெண்ட் ஹாஸ்பிட்டல்ல சுகப் பிரசவமா பிறந்ததுன்னு எவ்வளவோ சொல்லலாம். ஆனா இப்ப உள்ள 2கே கிட்ஸ்க்கு பள்ளிக்கூடம் பீஸ் கட்ட சொத்துல பாதியை விக்க வேண்டியிருக்கு. ஏற்கெனவே நீட் கொண்டுவந்து நம்ம பசங்க டாக்டராக கூடாதுன்னு பார்க்குறாங்க. கொஞ்ச பேர் கவர்மெண்ட் ஆஸ்பத்திரி பக்கம் போறதையும் கெடுக்குற மாதிரி மாத்திரையில ஊசியை சொருகிவச்சுருக்காங்களாம். அப்டேட்டை பாருங்க. ஸ்கூல் பீஸ் கட்ட லோன் கொடுக்குறாங்களாம் என்னன்னு விசாரிச்சுட்டு வாரேன்.
**@shivaas_twitz**
உன்னைப் பற்றி நினைப்பதற்கு மட்டும் காப்புரிமை கேட்டுவிடாதே…
நான் உலக வங்கியில் கடன் வாங்க வேண்டியிருக்கும்..!
**@Shalin Maria Lawrence**
ஹிந்தி எதிர்ப்பு எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.
மொதல்ல இந்த கொங்கு தமிழ் பேசுனா மரியாதயானவங்க ,தென் தமிழ்நாட்டு தமிழ் பேசுனா வீரமானவங்க… மெட்ராஸ் தமிழ் பேசுனா அசிங்கமானவங்கன்னு நெனைக்கிறான் பார் அவன் காதுக்கு கீழே ரெண்டு சுல்லுன்னு வைங்க.
**@Annaiinpillai**
என் மீதான விமர்சனங்களை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை – OPR#
# அப்பாக்கு புள்ள தப்பாம பிறந்திருக்கு!?
**@Kozhiyaar**
ஒரு நடுத்தர வயது ஆணின் வண்டியின் வேகம், அவன் சுமக்கும் குடும்ப பாரத்தை பொருத்தே அமைகிறது!!!
**@pachaiperumal23**
ஏண்டா TMT கம்பி வாங்கிட்டு வான்னா அரசு மருத்துவமனை மாத்திரையை வாங்கிட்டு வந்துருக்க?
இதிலயும் இரும்பு இருக்கு. இதவெச்சும் வீடு கட்டலாம். கட்டிடத்திற்கு உறுதி கவர்மெண்ட் ஆஸ்பத்திரி மாத்திரைகள்.
**@RahimGazzali**
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும்!- எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா
அதற்கு ஜெயலலிதாதான் மீண்டும் உயிரோடு வரவேண்டும்.
**@Kozhiyaar**
பலி ஆடுகள் கிடைத்தவுடன் கருப்பு ஆடுகள் மறக்கப்பட்டு விடும்!!!
**@anand17m**
செய்தித்தாளில் தனியார் பள்ளிகள் ‘நீட்’டா விளம்பரம்…
கல்வி வியாபாரம் தானே முக்கியம்…
**@prakash_sakthi**
தமிழகத்தில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரயைிட
தமிழக அரசு அனுமதி.
லவ்வர்ஸ்; இனிமேல் இங்க தான் லிவிங்ஸ்டன்
**@kathir_twits**
24 மணி நேரமும் கடை திறக்கலாம்
தியேட்டர் இயங்கலாம்
சரி இதெல்லாம் எதற்கு
அடிக்கடி மின்வெட்டு இப்போ வருது அதை மறைக்கவா !!
**@parveenyunus**
ஆந்திராவில் ‘ரோஜா’ மலர்கிறது. தமிழ்நாட்டில் ‘தாமரை’ மலரவில்லை # What a pity..!
**@Annaiinpillai**
நிபா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் இல்லை.- அமைச்சர் விஜயபாஸ்கர்# இருந்தா ஆண்டி வைரஸ் போட்டு வைரஸ கிளின் பண்ணிடுவிங்க அப்படி தானே?
**@shivaas_twitz**
தமிழகத்தில் மதுபான கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் – அமைச்சர் தங்கமணி
அந்த படிக்கட்டு வானம் வரைக்கும் இருக்கும் போல…
**@manekuttan**
வீடு ஷிப்ட் பண்ணும்போது காணாமல் போன பொருள் மட்டும் இல்ல சில நினைவுகளும் கிடைக்கும்…..
**@nandhu_twitts**
மனைவி அமைவதெல்லாம் புரோக்கர் விடும் ரீலைப் பொறுத்தது..!!
**@shivaas_twitz**
ஆண்-பெண் பேதம் களையப்பட வேண்டும்
பஸ்ல காலையில போகும் போதும் நம்ம சைடு தான் வெயில் அடிக்குது
சாயங்காலம் திரும்பி வரும்போதும் நம்ம சைடு தான் வெயில் அடிக்குது
**@motheen_farook**
கேரள குருவாயூர் கோயிலில் எடைக்கு எடை தாமரை மலர்களை காணிக்கையாக செலுத்தினார் – பிரதமர் மோடி
எடைக்கு எடை தாமரைக்கு பதிலாக EVM ஓட்டு மெஷின்களை கொடுத்து இருக்கலாம் ..!!
**@Annaiinpillai**
‘தமிழக பா.ஜ.க தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்’ – பொன்.ராதாகிருஷ்ணன் # பின்ன டிரம்பா பொறுப்பேற்பாரு- மக்கள்!
**@smhrkalifa**
அரசு மருத்துவமனையில் கொடுத்த மாத்திரைக்குள் இரும்புக் கம்பி! – அதிர்ந்த நோயாளி.
//இரும்பு தேசத்தின் கரும்பு மனிதரின் ஆட்சியல்லவா…
**@yugarajesh2**
ஆந்திரா அதிரடியை பார்த்திட்டு, தமிழக ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் எல்லோரும் துணை முதல்வர் பதவி தங்களுக்கும் வேண்டும்னு சொல்லி ஆளாளுக்கு அம்மா சமாதியில் உட்கார்ந்து அடம்பிடிக்கப்போறாங்கன்னு நினைக்கிறேன்.
**@pachaiperumal23**
சனிக்கிழமை சாயந்திரம் ஆயிட்டாலே நாளைக்கு கோழி வாங்கலாமா கறி எடுக்கலாமான்னு தோணுதே தவிர
வீட்டை ஒதுங்க வைப்போம் துணிய தொவச்சி போடுவோம்னு தோணவே மாட்டேங்குது.
-லாக் ஆஃப்
**
மேலும் படிக்க
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
**
[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)
**
**
[நடிகர் சங்கத் தேர்தல்: பின்னணியில் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/08/48)
**
**
[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)
**
**
[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)
**
�,”