தென்னிந்திய திரைப்பட மற்றும் சின்னதிரை ஸ்டண்டு யூனியன் 50-ம் ஆண்டு பொன்விழா ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அந்தச் செய்தி குறிப்பில்: “ஸ்டண்டு யூனியனின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சிகள் சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி கொள்கிறோம். இவ்விழா சிறப்பாக அமைய தென்னிந்திய நடிகம் சங்கம் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது. என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொள்ளுமாறு ஸ்டண்டு யூனியன் சார்பாக நடிகர் சங்கத்தில் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையை ஏற்று மூத்த நடிகர், நடிகைகளும் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இந்த விழாவில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அனைவருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த விழாவுக்காகத் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அன்றைய (ஆகஸ்ட் 26) படப்பிடிப்பை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.�,”