uவிமான விபத்து: பலியானோரின் சடலங்கள் மீட்பு!

Published On:

| By Balaji

விபத்துக்குள்ளான ஏஎன் 32 விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிருடன் இல்லை என்று அறிவித்துள்ளது இந்திய விமானப் படை. இன்று அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டன.

கடந்த ஜூன் 3ஆம் தேதி மதியம் 12.27 மணியளவில் அசாம் மாநிலம் ஜோர்காத்தில் இருந்து அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மெசுகா நோக்கிப் புறப்பட்டது இந்திய விமானப்படையைச் சேர்ந்த ஏஎன் 32 ரக விமானம். சுமார் அரை மணி நேரத்தில் அது ராடார் கண்காணிப்பில் இருந்து மறைந்தது. இதனைத் தேடும் பணியில் இஸ்ரோ, இந்திய கடற்படையுடன் இணைந்து ஈடுபட்டது இந்திய விமானப்படை. கடந்த 11ஆம் தேதியன்று எம்ஐ 17 ஹெலிகாப்டர் மூலமாகத் தேடுதல் வேட்டையை இந்திய விமானப்படையினர் தொடர்ந்தபோது, அருணாசலப் பிரதேசத்திலுள்ள சியாங் மாவட்ட மலைப்பகுதியில் ஏஎன் 32 விமானத்தின் பாகங்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர்.

லிபோ, டடோ எனுமிடங்களுக்கு இடையே, சுமார் 12,000 அடி உயரத்தில் விமான பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தபிறகு, அந்த விமானத்தில் பயணித்த 13 பேரும் உயிருடன் இல்லாததை உறுதி செய்தது விமானப்படை. இன்று (ஜூன் 13) இது குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

“இன்று காலையில் மீட்புக் குழுவைச் சேர்ந்த 8 பேர் விமானத்தின் பாகங்கள் கிடந்த இடத்துக்குச் சென்றனர். ஏஎன் 32 விமானத்தில் பயணித்தவர்களில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறது இந்திய விமானப் படை” என்று அதன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இன்று மாலையில் அந்த விமானத்தின் கருப்பு பெட்டி மற்றும் அதில் பயணித்த 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இது பற்றி, அவ்விமானத்தில் பயணித்த 13 பேரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விங் கமாண்டர் ஜி.எம்.சார்லஸ், ஸ்குவாட்ரன் லீடர் ஹெச்.வினோத், ப்ளைட் லெப்டினண்ட் ஆர்.தாபா, ஏ.தன்வர், எஸ்.மொஹந்தி, எம்.கே.கார்ஹ், வாரண்ட் ஆபிசர் கே.கே.மிஸ்ரா, சார்ஜண்ட் அனூப் குமார், கார்பொரல் ஷெரின், லீடிங் ஏர்கிராஃப்ட்மெண்ட் எஸ்.கே.சிங், பங்கஜ், இந்திய விமானப்படையைச் சாராத புதாலி, ராஜேஷ்குமார் ஆகியோர் இந்த விமானத்தில் பயணித்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

**

மேலும் படிக்க

**

**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**

**[ரோஜாவுக்கு முக்கிய அரசு பதவி!](https://minnambalam.com/k/2019/06/13/11)**

**[டிஜிட்டல் திண்ணை: விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல்- ஓ.பன்னீர் சூசகம்](https://minnambalam.com/k/2019/06/12/74)**

**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**

**[அதிமுகவின் கொங்கு கோட்டை உடைந்தது: ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/06/13/17)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share