Uவிஜய் சேதுபதியின் டபுள் ட்ரீட்!

public

தமிழ் சினிமாவில் கடந்த பத்தாண்டுகளில் மிகப் பெரும் உயரங்களை எட்டியவர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடித்துவரும் இவர், தற்போதுதான் நடிக்கும் சங்கத் தமிழன் படத்தில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைக்க தயாராகி வருகிறார்.

வாலு, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் விஜய சந்தர். இவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி தற்போது நடித்துவரும் படம் சங்கத் தமிழன். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. முறுக்கிய மீசையுடன் விஜய் சேதுபதி போஸ்டரில் இடம்பெற்றிருந்தார்.

ராஷிகண்ணா, நிவேதா பெத்துராஜ் என இரண்டு கதாநாயகிகள் நடித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு கதாநாயகிகளில் யார் விஜய் சேதுபதிக்கு ஜோடி என்ற கேள்வி எழுந்த நிலையில், இருவரும்தான் என்ற பதில் வந்துள்ளது. அதாவது விஜய் சேதுபதி இதில் முதன்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி. பாரதி ரெட்டி தயாரிக்கிறார்.

.

.

**

மேலும் படிக்க

**

.

[டிஜிட்டல் திண்ணை: சசிகலா- எடப்பாடி: சமரச தூதர் யார்?](https://minnambalam.com/k/2019/05/09/80)

.

[சசிகலாவுக்குத் தூதுவிட்ட எடப்பாடி பழனிசாமி](https://minnambalam.com/k/2019/05/09/26)

.

[காங்கிரஸுக்கு தூதுவிடும் தெலங்கானா முதல்வர்!](https://minnambalam.com/k/2019/05/09/48)

.

[தேனி விவகாரம்: பன்னீர் பதில்!](https://minnambalam.com/k/2019/05/09/51)

.

[ரஞ்சன் கோகாய்: குற்றச்சாட்டும் விசாரணை நடைமுறையும்](https://minnambalam.com/k/2019/05/09/19)

.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0