விக்ரம் நடிக்கும் புதிய படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
டிமான்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரு த்ரில்லர் படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. இவர் இயக்கும் அடுத்தப் படத்தில் விக்ரம் கதாநாயகனாக நடிக்கிறார். விக்ரம் நடிக்கும் 58ஆவது படமாக உருவாகும் இதில் இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.
விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அடுத்ததாக அவர் கைவசம் பெரிய பட்ஜெட் படங்கள் உள்ளன. மலையாளத்தில் மகா வீர் கர்ணா படத்தில் ஒப்பந்தமாகியுள்ள அவர், மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனை தழுவி உருவாகும் படத்தில் தான் நடிப்பதாக அறிவித்துள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**
**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**
**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**
�,”