சமீபத்தில், ஃபேஸ்புக் லைட் மற்றும் யூடியூப் கோ ஆகிய புதிய அப்ளிகேஷன்கள், குறைந்த வேகத்தில் இண்டர்நெட் சேவை இருந்தாலும் செயல்படும்விதத்தில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, தற்போது ட்விட்டர் நிறுவனமும் அதேபோல் குறைவான இண்டர்நெட் வேகத்திலும் செயல்படும் ட்விட்டர் லைட் என்ற அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வெர்சன் பயனர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான ட்விட்டர் அப்ளிகேஷன்களைக் காட்டிலும் 30% அதிக வேகத்துடன் செயல்படும் இந்த புதிய வெர்சன் மூலம் மொபைல் டேட்டா பயன்பாட்டை சுமார் 70% வரை சேமிக்கலாம்.
மேலும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்த 1MBக்கும் குறைவான இடமே தேவை என்பதால் பெரும்பாலான மொபைல்களில் பயன்படுத்தலாம். ட்விட்டர் லைட் 6 இந்திய மொழிகள் உள்பட மொத்தம் 42 மொழிகளில் செயல்படுகிறது. ஃபேஸ்புக் லைட் மற்றும் யூடியூப் கோ செயலி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக, இந்த ட்விட்டர் லைட் அப்ளிகேஷனும் மக்களின் பெரும் வரவேற்பைப் பெறும் என்றே கூறலாம்.�,