[ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 12.12 விழுக்காடு சரிவைக் கண்டுள்ளது.
இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி 12.12 விழுக்காடு சரிவடைந்து 6.61 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடைகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதேகாலட்டத்தில் 7.522 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு மற்றும் ஏற்றுமதி வரிக் குறைப்பு போன்ற காரணங்களால்தான் ஏற்றுமதி மதிப்பு சரிவடைந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
இந்த நிதியாண்டின் தொடக்கத்திலிருந்தே ஏற்றுமதி மதிப்பு சரிந்து வருகிறது. நிதியாண்டின் தொடக்கமான ஏப்ரல் மாதத்தில் 1.349 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தைக் காட்டிலும் 22.78 விழுக்காடு சரிவாகும். கடந்த ஆண்டு ஏப்ரலில் 1.747 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 1.292 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 1.338 பில்லியன் டாலராக இருந்தது.
ஆனால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளின் பண மதிப்பு 5 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஆகஸ்ட்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயத்த ஆடைகளின் ரூபாய் மதிப்பு ரூ.89.87 பில்லியன். இது கடந்த ஆண்டில் ரூ.85.57 பில்லியனாக மட்டுமே இருந்தது.�,