ஒட்டுமொத்த ரப்பர் துறைக்கும் பயன்படும் புதிய கொள்கை ஒன்றை உருவாக்கி வருவதாக ஒன்றிய வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியுள்ளார்.
கொச்சியில் அக்டோபர் 30ஆம் தேதி இந்திய ரப்பர் துறைக்கான கூட்டம் நடந்தது. கொச்சியில் உள்ள கிராண்ட் ஹுயாட் ஹோட்டலில் நடந்த இந்தக் கூட்டத்தை ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஷீலா தாமஸ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்தக் கூட்டத்திற்கு காணொளிச் செய்தி ஒன்றை வர்த்தக அமைச்சர் சுரேஷ் பிரபு அனுப்பியிருந்தார். அதில், “ஒன்றிய அரசு புதிய ரப்பர் கொள்கை ஒன்றை உருவாக்கி வருகிறது. இந்தப் புதியக் கொள்கை ரப்பர் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழில் துறையினர் என இத்துறையைச் சார்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் பயனளிக்கும் விதமாக இருக்கும். அதன்மூலம் பொருளாதாரமும் வளர்ச்சியடையும்” என்றார்.
இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.85,000 கோடி மதிப்பிலான ரப்பர் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் ரூ.19,000 கோடி மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பல்வேறு விதமான உற்பத்தியை அதிகரித்தல், மதிப்புக் கூட்டுதல், தொழில்நுட்ப மேம்பாடுகள், தரத்தை உயர்த்துதல், ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றுக்கு புதிய கொள்கையில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.�,