uயூட்யூப் ம்யூசிக்: கூகுளின் புதிய அறிமுகம்!

Published On:

| By Balaji

முழுக்க முழுக்க இசை ரசிகர்களை குறிவைத்து யூட்யூப் ம்யூசிக் என்ற புதிய தளத்தை யூட்யூப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனமான யூட்யூப் தற்போது யூட்யூப் ம்யூசிக் என்ற புதிய தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் இசை ரசிகர்களுக்கு விருந்தாக லட்சக்கணக்கான பாடல்கள் வழங்கப்பட்டுள்ளன. பாடல்கள் மட்டுமல்லாமல் பல்வேறு வானொலி சேனல்கள், ஆல்பம்கள், இசைக் கச்சேரிகளின் நேரலை, கவர் ம்யூசிக், வீடியோ பாடல்கள் என பல அம்சங்களை யூட்யூப் புகுத்தியுள்ளது. பாடல்களை ஆன்லைனில் ஸ்ட்ரீம் செய்யக்கூடிய யூட்யூப் ம்யூசிக்கில் விளம்பரங்களும் வரும். எனினும், கொஞ்சம் பணத்தை செலுத்தி ப்ரீமியம் வெர்ஷனை பெற்றுக்கொள்ளலாம். இதில் விளம்பரங்களில்லாமல் பாடல்களை கேட்டு ரசிக்க முடியும். மேலும், அளவில்லா பாடல்களையும், ஆல்பம்களையும், வீடியோக்களையும் ப்ரீமியம் வெர்ஷனில் பெற முடியும்.

யூட்யூப் ம்யூசிக்கின் சாதாரண வெர்ஷனை இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ளலாம். எனினும் ப்ரீமியம் வெர்ஷனுக்கு மாதம் ரூ.99 தொகையை செலுத்த வேண்டும். இதுமட்டுமல்லாமல் குடும்ப பிளான்களையும் யூட்யூப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி மாதம் ரூ.149 செலுத்தி ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் யூட்யூப் ம்யூசிக்கின் ப்ரீமியம் வெர்ஷனை பயன்படுத்தலாம். அறிமுக சலுகையாக மூன்று மாதங்களுக்கு இலவசமாக ப்ரீமியம் வெர்ஷனை பயன்படுத்திக்கொள்ளவும் யூட்யூப் அனுமதிக்கிறது. இந்தப் ப்ரீமியம் வெர்ஷனை பயன்படுத்துவோரால் கூகுள் ப்ளே ம்யூசிக்கின் ப்ரீமியம் வெர்ஷனையும் கூடுதல் செலவின்றி பயன்படுத்திக்கொள்ள முடியும். யூட்யூப் ம்யூசிக் செயலியை கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share