U‘மோடி ஜாக்கெட்’ விற்பனை மந்தம்!

Published On:

| By Balaji

மகாராஷ்டிர மாநிலத்தில் ‘மோடி ஜாக்கெட்’ ஆடை விற்பனை கடந்த சில மாதங்களாகவே குறைந்து வருவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருக்கும் ஜாக்கெட், நேரடி விற்பனையிலும் ஆன்லைன் விற்பனையிலும் மிகவும் பிரபலமானது. இது ‘நேரு ஜாக்கெட்’ எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வகை ஆடை விற்பனை மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே மிகவும் மந்தமாகவே இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர். முன்பெல்லாம் நாள் ஒன்றுக்கு 35 மோடி ஜாக்கெட்டுகள் விற்பனையாகும் எனவும், இப்போது ஒரு வாரத்துக்கு ஒரு ஜாக்கெட் விற்பனையாவதே பெரிய விஷயமாக இருப்பதாகவும் உள்ளூர் வியாபாரி ஒருவர் *பிடிஐ* செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஔரங்காபாத் நகரைச் சேர்ந்த ஜவுளி விற்பனையாளரான ராஜேந்திர பவ்சார், கடந்த ஒரு வருடத்தில் வெறும் 10 ஜாக்கெட்டுகள் மட்டுமே தனது கடையில் விற்பனையாகியுள்ளதாகக் கூறியுள்ளார். குல்மண்டி, திலக் பாத், ஔரங்புரா, சரஃபா, ஒஸ்மாபுரா, சிட்கோ உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஜவுளி விற்பனையாளர்களும் மோடி ஜாக்கெட் விற்பனை மிக மோசமாகவே இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். பணமதிப்பழிப்பு, சரக்கு மற்றும் சேவை வரி, வறட்சி உள்ளிட்ட காரணிகள் மகாராஷ்டிர மாநிலத்தில் மோடி ஜாக்கெட் விற்பனையைக் குறைத்துவிட்டதாக குர்விந்தர் சிங் என்ற ஜவுளித் துறை தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.

2018ஆம் ஆண்டின் செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, மோடி ஜாக்கெட்டுகளுக்கான விற்பனை காதி இந்தியா பிராண்டு பெயரில் டெல்லியில் தொடங்கப்பட்டது. 2018 அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.14.76 கோடி மதிப்புக்கு மோடி ஜாக்கெட்டுகள் விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share