uமோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!

Published On:

| By Balaji

பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்க ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசக் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மும்முரமாக செயல்பட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதைத்தொடர்ந்து டெல்லியிலிருந்து உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவிற்கு மதியம் 2.45 மணிக்கு புறப்படவுள்ளார். அங்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியையும், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்வையும் சந்திக்கவுள்ளார். அதைத்தொடர்ந்து லோக்தந்த்ரிக் ஜனதா தள தலைவர் சரத் யாதவ்வையும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி மட்டுமல்ல, பாஜகவுக்கு எதிரான எந்தக் கட்சி வேண்டுமானாலும் இணையலாம் என்று நேற்று (மே 17) சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் இரண்டு கூட்டம் நடத்தியுள்ள நிலையில் மே 23ஆம் தேதியன்று மூன்றாவது கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கூட்டத்திற்கான அனைத்து முயற்சிகளையும் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்துள்ளார்.

நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரை சந்தித்து தேர்தலுக்கு பிறகான கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் சந்திரபாபு நாயுடு. அதன்பின் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகளை சந்தித்த சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “தெலங்கானா ராஷ்டிர சமிதி மட்டுமல்ல பாஜகவுக்கு எதிரான எந்தவொரு கட்சியையும் நாங்கள் வரவேற்கிறோம். எங்களது மெகா கூட்டணியின் அத்தகைய அனைத்து கட்சிகளுக்கும் வரவேற்புண்டு. நான் எல்லோரையும் சந்தித்து வருகிறேன். அனைத்து தலைவர்களையும் சந்தித்த பிறகு திட்டம் வகுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பாஜகவுக்கு எதிரான கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளை முதன்முதலாக முன்னெடுத்தவர் சந்திரபாபு நாயுடு. ஏற்கெனவே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திரபாபு நாயுடு சந்தித்து வருவதால் மே 23ஆம் தேதியன்று நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மம்தா பானர்ஜியையும், சந்திரபாபு நாயுடுவையும் அரசியலிலிருந்தே அப்புறப்படுத்த வேண்டும் என்று மோடி கோவமாக சொல்லி வருவதாக நாயுடுவின் நண்பர்கள் அவரிடம் சொல்லியிருக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வந்தால் தன் உயிருக்கே ஆபத்து வந்துவிடக்கூடும் என்று அஞ்சிய சந்திரபாபு நாயுடு எப்படியாவது பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தே ஆகவேண்டும் என மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக பல முக்கிய நபர்களை சந்திக்க அப்பாய்ண்ட்மெண்ட் கொடுத்திருந்தார் சந்திரபாபு நாயுடு. ஆனால் ராகுல் காந்தி, மாயாவதி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்ததும் அத்தனை அப்பாய்ண்ட்மெண்ட்களையும் ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் நாயுடு.

.

.

**

மேலும் படிக்க

**

.

**

[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)

**

.

**

[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)

**

.

**

[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)

**

.

**

[இன அழிப்புப் போரில் இறந்தோருக்கு அஞ்சலி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/24)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share