uமும்பை மேம்பால விபத்து: ரயில்வே பொறுப்பல்ல!

Published On:

| By Balaji

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் அருகேயுள்ள நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்ததற்கு ரயில்வே நிர்வாகம் பொறுப்பேற்காது என மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது.

மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் எதிர்புறத்தை பாதசாரிகள் அடையும் விதமாக, அங்கு ரயில்வே மேம்பாலம் ஒன்று உள்ளது. சாலையின் மேலே அமைக்கப்பட்டுள்ள இந்த மேம்பாலம், நேற்றிரவு(மார்ச் 14) 7.30 மணியளவில் திடீரென்று இடிந்து விழுந்தது. மேம்பாலத்தின் மேலே சென்று கொண்டிருந்தவர்கள் கீழேயிருந்த சாலையில் விழுந்தனர். பாலத்தில் இருந்த இரும்பு கம்பிகள், தளம் என மொத்தமாகக் கீழே விழுந்தது. இதில், ஆறு பேர் உயிரிழந்தனர். 34 பேர் காயமடைந்தனர். அதனால், அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 7 மணிக்கு பிறகு சாலை பயன்பாட்டிற்கு விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இந்த சம்பவத்துக்கு முதன்மை பொறுப்பு யார் என்பதை இன்று(மார்ச் 15) மாலைக்குள் தெரிவிக்க வேண்டும் என மும்பை நகராட்சி ஆணையர் அஜோய் மேத்தாவுக்கு மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 24 மணி நேரத்திற்குள் இந்த சம்பவம் தொடர்பாக முதன்மை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கண்காணிப்பு துறைக்கு நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார். இந்நிலையில், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆறு மாதங்களுக்கு முன்பு நகராட்சி சமர்ப்பித்த கட்டுமான தணிக்கை அறிக்கையில் இந்த பாலம் பயன்படுத்துவதற்கு தகுதியுடையது” என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல் துறையின் இணை ஆணையர் தேவன் பாரதி கூறுகையில், “நகராட்சி மற்றும் ரயில்வே துறையின் கவனக் குறைப்பாட்டினால்தான் இந்த விபத்து நடந்துள்ளது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது போலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது” என கூறினார்.

மேம்பாலம் பராமரிப்பு நகராட்சியின் அதிகாரத்திற்குட்ப்பட்டது என்பதை நகராட்சியே ஒத்து கொண்டதால், இதற்கு ரயில்வே பொறுப்பல்ல என போலீஸ் தெரிவித்துள்ளது.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share