Uமாணவர்களுக்கு இலவச விமான பயணம்!

Published On:

| By Balaji

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 48 பேர் இலவசமாக விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 ஆம் தேதியானது, நாடு முழுவதும் குழந்தைகள் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. சென்னை விமான நிலையமானது இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவற்றுடன் இணைந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கனவுப் பயணம் என்ற இலவச விமானப் பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

விமான நிலையம் அருகே உள்ள அரசுப் பள்ளிகளிலிருந்து சுமார் 48 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் சென்னையிலிருந்து திருச்சி வரை செல்லும் விமானத்தில் 45 நிமிடங்கள் பயணம் செய்தனர். காலை 9.45 மணிக்குச் சென்று, மீண்டும் 10.30 மணிக்குச் சென்னை திரும்பினர். விமானப் பயணத்தில் மாணவர்கள் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் இருந்தனர்.

அதே போன்று ட்ரூ ஜெட் விமான நிறுவனத்தினர், தனியார் பள்ளி மாணவர்கள் சிலரைச் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் இலவசமாக அழைத்துச் சென்றனர். அந்த மாணவர்களுக்கு விமானத்திலேயே உணவுகள் வழங்கப்பட்டன.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share