uமன அழுத்தம்: கணையப் புற்றுநோயை உருவாக்கும்!

Published On:

| By Balaji

நவீன உலகில் உணவு பழக்க வழக்கம், மரபணு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மனிதர்களுக்குப் புற்றுநோய் ஏற்படுகிறது. தற்போது மன அழுத்தம் காரணமாகவும் கணையப் புற்றுநோய் உருவாகுவதாகச் சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கணையப் புற்றுநோய் ஆய்வு தொடக்கத்தில் எலிகள் மேல் நடத்தப்பட்டது. அதை உறுதிசெய்த பின்னர் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறுபவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வில், அவர்களில் பெரும்பாலானோருக்கு மன அழுத்தத்தால் கணையப் புற்றுநோய் உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது. அதிகமான மன அழுத்தம் காரணமாக நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு ஹார்மோன்கன் வெளியாகி, அதன்மூலம் ‘டி.என்.ஏ’ மூலக்கூறுகளில் மாற்றம் ஏற்பட்டு கணையத்தில் புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சில அறிவியல் நிபுணர்கள் இதை ஏற்க மறுத்துள்ளனர். மன அழுத்தத்தால் கணையப் புற்றுநோய் உருவாகுமா என்று சிலர் ஆச்சர்யத்தில் உள்ளனர்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment