uபேருந்துக் கட்டண உயர்வு: லாபத்தில் ரயில்வே!

public

தமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் அதிகமாக ரயில்களில் பயணம் செய்துவருவதால் ரயில்வேத் துறைக்கு கடந்த இரு தினங்களில் (ஜனவரி 20, 21) மட்டும் ரூ.11 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.

கடந்த வாரம் தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்தியதைத் தொடர்ந்து, ரயில் கட்டணம் குறைவு என்பதால் ரயிலில் மக்கள் அதிகமாகப் பயணம் செய்துவருகின்றார்கள்.

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களிலும் நீண்ட தூரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் படிக்கட்டில் தொங்கியபடி மக்கள் பயணம் செய்கின்றனர். தற்போது, ரயில் பயணத்திற்கு மக்கள் மாறிவருவதால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பிவழிகிறது.

ரயிலில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தெற்கு ரயில்வே துறைக்கு வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த 20, 21ஆம் தேதிகளில் மட்டும் ரூ.11 கோடியே 16 லட்சத்து 94 ஆயிரத்து 340 வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

சென்னை கோட்டத்தில் ஜனவரி 20ஆம் தேதி எக்ஸ்பிரஸ் ரயிலில் 4 லட்சத்து 47 ஆயிரத்து 631 பேர் பயணம் செய்துள்ளனர். மின்சார ரயிலில் 12 லட்சத்து 47 ஆயிரத்து 596 பேர் பயணித்தனர். இதன் மூலம் ஒரு கோடியே 920 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. மதுரை கோட்டத்தில் 55 லட்சத்து 45 ஆயிரமும், சேலம் கோட்டத்தில் 53 லட்சத்து 46 ஆயிரமும் வருமானம் கிடைத்துள்ளது.

மேலும் திருச்சி கோட்டத்தில் 50 லட்சத்து 29 ஆயிரமும், திருவனந்தபுரம் கோட்டத்தில் ஒரு கோடியே 15 லட்சமும், பாலக்காடு கோட்டத்தில் 85 லட்சத்து 40 ஆயிரமும் ரயில்வேத் துறைக்கு வருவாய் கிடைத்திருக்கிறது. இதே போல ஜனவரி 21ஆம் தேதியிலும் அனைத்துக் கோட்டங்களிலும் கடந்த ஆண்டை விடக் கூடுதலாகப் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

பேருந்துக் கட்டண உயர்வால் பொதுமக்கள் ரயில் பயணத்திற்கு மாறிவருவதால், ரயில்வேத் துறைக்கு வருவாய் அதிகரித்துள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *