2016ஆம் ஆண்டு முதல் பாலியல் புகாரில் சிக்கிய 48 பேரைப் பணி நீக்கம் செய்தது கூகுள் நிறுவனம். இந்நிலையில், உலகம் முழுவதும் 1,500க்கும் மேற்பட்ட கூகுள் ஊழியர்கள் தங்கள் பணியை விட்டு விலகவுள்ளதாக, தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனத்தில் வேலை, கலாச்சாரம் மற்றும் பாலியல் வழக்குகளைக் கையாளும் விதம் போன்றவற்றை எதிர்த்து 1,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதற்காக, அவர்கள் தங்கள் பணியை விட்டு விலகவுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.
இது குறித்து கூகுள் யூடியூப் விளம்பரப் பிரிவு மேலாளர் கிளேர் ஸ்டெபிள்டன் கூறுகையில், “நாங்கள் சமமற்றவர்களாக இருக்கிறோம் அல்லது நாங்கள் மதிக்கப்படுவதில்லை என்று உணர, நாங்கள் விரும்பவில்லை” என கூறினார்.
கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, தனது நிறுவன ஊழியர்களுக்குக் கடந்த வாரம் கடிதம் எழுதினர். அதில், பாலியல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்திருந்தார். பாலியல் தொந்தரவு குறித்து வரும் புகார்களின் மீது உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் அவர் கூறியிருந்தார்.�,