பேரறிவாளனின் பரோலை நீட்டிக்க வேண்டுமென சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்திடன் அற்புதம்மாள் மனு அளித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 26 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருந்துவந்த பேரறிவாளன், ஒரு மாத பரோலில் கடந்த மாதம் 24ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். திருப்பத்தூர் இல்லத்தில் தங்கியிருக்க வேண்டும், ஊடகங்களுக்குப் பேட்டி அளிக்கக் கூடாது முதலான சில நிபந்தனைகளுடன் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. பேரறிவாளன் தற்போது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருந்துவருகிறார். பல்வேறு அரசியல் கட்சியினரும், அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர்.
பரோல் காலம் முடிய இன்னும் ஐந்து நாள்களே உள்ள நிலையில், பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக் கோரி, சட்ட அமைச்சர் சி.வி சண்முகத்தை இன்று (செப்டம்பர் 19) சந்தித்து அற்புதம்மாள் மனு அளித்துள்ளார்.�,