தமிழகம் முழுவதும் மிகப்பெரிய குடிநீர் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. முக்கியமாக, தலைநகர் சென்னையில் மக்கள் தண்ணீரின்றி அவதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னைக்கு தண்ணீர் விநியோகித்து வந்த ஏரிகளும் வறண்டுள்ளன. குடிநீர் பிரச்சினையால் பலதரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சிப் பள்ளிகளில் குடிநீர் பற்றாக்குறையால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு சமைக்க போதிய குடிநீர் இல்லாத காரணத்தால் சென்னையில் உணவகங்கள் மதிய உணவு சேவையை மட்டும் நிறுத்த ஆலோசித்து வருகின்றன. ஐடி நிறுவனங்கள் நீர் போதாமையால் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை பார்க்கும்படி அறிவுறுத்தியுள்ளன.
இந்நிலையில், நெட்டிசன்கள் #தவிக்கும்தமிழ்நாடு என்ற ஹேஷ்டேகின் கீழ் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சினை குறித்த தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. இந்த ஹேஷ்டேகின் கீழ் சென்னையில் நிலவும் குடிநீர் பிரச்சினை பற்றிய தகவல்கள், வறண்ட நீர்நிலைகள் பற்றிய விவரங்கள், தண்ணீர் போதாமையால் மக்கள் நடத்திய போராட்டங்கள், அரசுகளுக்கு விடுக்கப்படும் கோரிக்கைகள், தற்போதைய நீர் மேலாண்மை பற்றிய விமர்சனங்கள் என பல பதிவுகள் இடப்பட்டுள்ளன.
சென்னை மட்டுமல்லாமல் கடலோர பகுதிகள், புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட பல மண்டலங்களில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்சினை பற்றியும், சுற்றுச்சூழல் மாசு, மாற்று வழிகள் பற்றிய விவாதங்களும் பகிரப்பட்டுள்ளன. இந்த ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளதால் தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினை தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து ஒரு விவாதப் பொருளாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கலைப்பு- ஸ்டாலினை குறிவைக்கும் வருமான வரித்துறை!](https://minnambalam.com/k/2019/06/14/65)**
**[தினகரன் தளபதிக்கு எடப்பாடி தூது: ஜெயக்குமார் எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/06/14/51)**
**[அதிமுக: அந்த 11 பேர் குழுவில் யார் யார்?](https://minnambalam.com/k/2019/06/13/22)**
**[மூடப்படும் அருவிகள்: கேரளத்தில் பண மழை!](https://minnambalam.com/k/2019/06/14/20)**
**[பாக்கியராஜ் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு!](https://minnambalam.com/k/2019/06/13/44)**
�,”