அனிருத், விவேக் – மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் தும்பா படத்துக்காக இசையமைத்துள்ளனர். தும்பா படத்தின் முதல் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்தது. தற்போது இந்தப் படத்தின், இரண்டாவது ட்ரெய்லரும் வெளியாகி இருக்கிறது. இந்த ட்ரெய்லரில் நடிகர் ஜெயம் ரவி இடம்பெற்றுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது . இயற்கைச் சூழல், விலங்குகள், பறவைகள் என்று ஒரு காட்டை கதைக்களமாகக் கொண்ட கதையாக தும்பா உருவாகியிருக்கிறது. ட்ரெய்லரில் இடம்பெறும் காட்சிகளிலிருந்தே இது குழந்தைகளை வெகுவாக கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது புலப்படுகிறது. கதாநாயகி கீர்த்தி பாண்டியன் போட்டோகிராபர் கதாபாத்திரத்திலும், கதாநாயகன் பெயின்டர் கேரக்டரில் இந்தப் படத்தில் நடித்திருக்கின்றனர் என உணரமுடிகிறது.
இந்த நிலையில், தும்பா திரைப்படத்தில் இடம்பெறும் ‘ஹம்டி டம்டி’ பாடலை சிவகார்த்திகேயன் பாடியுள்ள வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. சிறுவர்களைக் கவரும் வரிகளுடன், வன விலங்குகள் குதூகலமாய் ஆடும் கிராபிக்ஸ் காட்சிகளுடன் இந்தப் பாடலின் வீடியோ காட்சிகள் அமைந்துள்ளது. இந்தப் பாடலுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். ‘கனா’ திரைப்படத்தில் தன் மகளுடன் இணைந்து சிவகார்த்திகேயன் பாடிய ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
கனா படத்தில் ஹீரோவாக நடித்த தர்ஷன், ‘தும்பா’ படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள், கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். மேலும் முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் டிவி கலக்கப்போவது யாரு புகழ் தீனா நடித்துள்ளார். இந்தப் படத்தை ஹரீஷ் ராம் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குநர் துரை செந்தில்குமாரின் உதவியாளராகப் பணியாற்றியவர். தும்பா திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என நான்கு மொழிகளில் வெளியாகிறது.
[தும்பா ‘ஹம்டி டம்டி’ வீடியோ](https://youtu.be/jcFVfw5e93Y)
[தும்பா ட்ரெய்லர் 2](https://youtu.be/lfUaCYCarGY)
**
மேலும் படிக்க
**
**
[டிஜிட்டல் திண்ணை: ஆலோசனைக் கூட்டம்! எடப்பாடி-பன்னீர் க்ளைமேக்ஸ் ஒப்பந்தம்!](https://minnambalam.com/k/2019/06/11/65)
**
**
[உள்ளாட்சித் தேர்தல் நடக்காது: அமமுக எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/06/11/55)
**
**
[அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/06/11/26)
**
**
[கலெக்டர் ரோகிணியை எகிறிய எடப்பாடி](https://minnambalam.com/k/2019/06/10/46)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
�,”