தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய திரையுலகில் கதாநாயகியாக வலம் வரும் சாய் பல்லவி கன்னடத்திலும் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார்.
கஸ்தூரி மான், தாம் தூம் ஆகிய படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்த சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானார். அதைத் தொடர்ந்து துல்கர் சல்மானுக்கு ஜோடியாக களி படத்தில் நடித்த அவர் தெலுங்கில் ஃபிடா படத்தில் நடித்து அங்கும் கவனம் பெற்றார். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தியா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்தப் படம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. ஆனால் தனுஷுக்கு ஜோடியாக அவர் நடித்த மாரி 2 திரைப்படமும், அதில் இடம்பெற்ற ரௌடி பேபி பாடலும் பெரும் கவனம் பெற்றது.
தற்போது இவர் கன்னடத் திரையுலகிலும் கதாநாயகியாக நடிக்கவுள்ளார். நடிகை ராக்ஷிதாவின் கணவர் பிரேம் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்தப் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் என்ஜிகே படத்திலும் சாய் பல்லவி நடித்துள்ளார். இதில் மற்றொரு கதாநாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மே மாதம் 31ஆம் தேதி இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
�,