வீரமாதேவி திரைப்படத்தில் நடிகை சன்னி லியோன் நடிக்க தடை விதிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆபாச பட நடிகையாக அறிமுகமான சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். தற்போது, அவரது பயோபிக்கான கரெஞ்சித் கவுர் வெற்றிகரமான முதல் சீசனை தொடர்ந்து இரண்டாவது சீசனிலும் பாராட்டுக்களை குவித்து வருகிறது.
இதனிடையே இயக்குநர் வி.சி. வடிவுடையான் இயக்கத்தில் உருவாகிவரும் வீரமாதேவி படம் மூலம் முதன்முறையாகத் தமிழில் நாயகியாக அறிமுகமாகிறார் சன்னி லியோன். சோழ பேரரசர் முதலாம் ராஜேந்திர சோழனின் மனைவி ராணி வீரமாதேவி, சிறந்த போர் வீராங்கனையாக இருந்தவர். இவரது வாழ்க்கை வரலாற்றை, வீரமாதேவி என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்து வருகின்றனர். இதில், வீரமாதேவி வேடத்தில் நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார்.
இந்நிலையில், செல்லூரைச் சேர்ந்த சரவணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஆபாச படங்களில் நடித்துள்ள சன்னிலியோன், வீரமாதேவி வேடத்தில் நடிக்கத் தடை விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்புக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும், சன்னிலியோனை நீக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விரைவில் விசாரணைக்கு வருகிறது.
�,”