Uசண்டக்காரி: ஷ்ரேயா ரிட்டர்ன்ஸ்!

Published On:

| By Balaji

விமல் நடிக்கும் சண்டக்காரி என்ற படத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் ஷ்ரேயா சரண் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

விமல் நடிப்பில் கடைசியாக வெளிவந்த இவனுக்கு எங்கயோ மச்சமிருக்கு திரைப்படத்தின் தோல்விக்குப் பின் தனது வெற்றிப் படமான களவானியின் இரண்டாம் பாகத்தில் கவனம் செலுத்தி வந்தார். களவானி 2 படத்தை வெளியிட பல்வேறு சர்ச்சைகள் நடைபெற்று வரும் நிலையில், அவரது அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.

இயக்குநர் ஆர். மாதேஷ் இயக்கத்தில் சண்டக்காரி என்ற படத்தில் விமல் தற்போது நடித்து வருகிறார். விமலுக்கு ஜோடியாக ஷ்ரேயா சரண் நடித்து வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனின் நடைபெற்று முடிவடைந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பை தமிழ் நாட்டிலுள்ள கிராமப் பகுதிகளில் எடுக்க திட்டமிட்டுள்ளது படக்குழு. திருமணத்திற்குப் பின் ஷ்ரேயா நடிக்கும் படமிதுவாகும்.

சிம்புவுடன் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்குப் பின் ஷ்ரேயா நரகாசூரன் என்ற படத்தில் நடித்தார். அப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், சண்டக்காரி படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

சுறா, மஹதீரா படங்களில் வில்லனாக நடித்த தேவ் கில் இப்படத்தில் நடித்துவருகிறார். மேலும் படம் பற்றிய முக்கிய தகவல்கள் இனி வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share