Uகொலை மாநிலமாக மாறிய புதுச்சேரி!

Published On:

| By Balaji

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் நேற்று மே 10ஆம் தேதி இரவு ஒரு டூ வீலரில் வந்த இரண்டு பேரில், ஒருவன் கையில் இருந்த ஒரு இளைஞன் தலையை தூக்கிக் காவல் நிலையத்தின் முன்பு வீசி உருட்டிவிட்டு எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமலும், பதட்டம் இல்லாமலும் சென்றார்கள். ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் போடப்பட்ட தலையின் உடல், புதுச்சேரி மாநிலம் பாகூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பின்னாச்சிக்குப்பத்தில் கிடந்தது. இறந்தவன் பாகூர் அடுத்த குடியிருப்பு பாளையத்தைச் சேர்ந்த சுவேதன் என்பதைக் கண்டுபிடித்துள்ளது புதுச்சேரி, தமிழ்நாடு போலீஸ்.

புதுச்சேரியில் கடந்த ஆட்சியில் கொலைக் குற்றங்கள் அதிகரித்ததால், மக்கள் சுதந்திரமாக நடமாடமுடியாமல் மிகவும் அவதியடைந்தார்கள். வியாபாரிகள், ரவுடிகளை ஒடுக்க வேண்டுமென வலியுறுத்தி அரசுக்கு எதிராகப் போராடினார்கள். பல தொழிற்சாலைகளை நடத்தும் நிறுவன உரிமையாளர்கள், ரவுடிகள் தொல்லைகள் தாங்கமுடியாமல் வெளிமாநிலத்துக்குச் சென்றார்கள். இந்நிலையில், முதல்வர் நாராயணசாமி தேர்தல் பிரசாரத்தில் முக்கியத் தேர்தல் வாக்குறுதியாக நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரவுடிகளை ஒடுக்குவோம், கட்டுப்படுத்துவோம் என்றுதான் ஆட்சிக்கு வந்தார்கள்.

முதல்வர் நாராயணசாமி ஆட்சிக்கு வந்த புதிதில் ரவுடிகளை ஒடுக்குவதில் ஆர்வம் காட்டினார். ரவுடிகள் கொட்டம் ஒடுக்கப்பட்டது. ஆனால், தற்போது, அடங்கிய ரவுடிகள் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துவிட்டார்கள் புதுச்சேரியில். கடந்த ஒரு மாதத்தில் 8 கொலைகள் நடந்துள்ளது, அதுவும், மக்கள் நடமாட்டம் உள்ள சாலையிலும், காரில் வெடிக்குண்டு வீசிக் கொலைசெய்வதும், ஓடவிட்டு வெட்டிச் சாய்ப்பதுமாகத்தான் நடந்துள்ளது.

தமிழக வாழ்வுரிமை கட்சி, புதுச்சேரி மாநில அமைப்பாளர் ஶ்ரீதர் இந்தக் கொலைகள் குறித்துக் கூறுகையில், அமைச்சர் கந்தசாமி உதவியாளர் வீரப்பனைப் பட்டப்பகலில் பாண்டி டூ கடலூர் சாலையில் வெட்டிச் சாய்த்தார்கள். உசுடு மாயவன் என்பவரை ரூ 5000 கூலிக்குக் கொலை செய்தார்கள். திருப்புவன தொழிலதிபர் வேலழகனை காரிலிருந்தபோது வெடிகுண்டு வீசியும், வெட்டியும் கொலை செய்தார்கள். இந்தக் கொலைத்தொடர்பாக போலீசிடம் சரணடைந்தவர்கள் கூலிக்கு வந்தவர்கள். உண்மையான குற்றவாளிகளை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை.இதன் பின்னணியில் ஒரு போலீஸ் அதிகாரி இருக்கிறார் என்பது காவல்துறைக்கும் தெரியும்.

வில்லியனூர் ரவுடி ரவிசங்கர் மற்றும் பாஜக வட்டாரத் தலைவர் ஜெகன் பிரபல ரவுடியை கொடூ ரமாக கொலை செய்தார்கள், அதுக்கு முன்பு கோரிமேடு பகுதியில் செல்வராஜ், பரத், இருவரையும் வெட்டி கூறு போட்டு மூட்டைக்கட்டி தூக்கியெறிந்தார்கள். நேற்று மே 10ஆம் தேதி சுவேதன் தலையை துண்டித்து தமிழ்நாடு பார்டர் காவல் நிலையம் வாசலில் வீசிச் சென்றுள்ளார்கள். இதையடுத்து, கடந்த ஒரு மாதத்தில் அரங்கேறிய 8 கொலையில் உண்மையான குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடிக்காததால், புதுச்சேரி கொலை மாநிலமாக மாறியுள்ளது.

�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment