uகுமரி: மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்!

Published On:

| By Balaji

பலமான காற்று வீசக்கூடும் என்பதால் குமரி பகுதியிலுள்ள மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (ஜூலை 18) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென்மேற்கு திசையிலிருந்து 40 முதல் 50 கிமீ வேகத்தில் பலமான காற்று வீசக்கூடும் என்பதால், மாலத்தீவு, மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் இரண்டு நாட்களுக்கு (ஜூலை 19, 20) கடலுக்குச் செல்ல வேண்டாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், “கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் இன்றும் நாளையும் தமிழகம் மற்றும் புதுவையில் வெப்ப சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும். தேனி, திருநெல்வேலி, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக் கூடும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரள மாநிலத்தின் பாலக்காடு, இடுக்கி, எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழாவில் எதிர்பார்த்த மழை தொடங்கி விட்டது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் கேரளம் முழுவதும் மழை பெய்யும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “மகிழ்ச்சியாக இருங்கள். தென்சென்னையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[ அடிக்கப் பாய்ந்த சத்யா – அடக்கிய சேகர்பாபு: சட்டமன்ற காட்சிகள்!](https://minnambalam.com/k/2019/07/18/25)**

**[டிஜிட்டல் திண்ணை: ரஜினி Vs ஸ்டாலின் -ஜோதிடர் மூட்டிய கலகம்!](https://minnambalam.com/k/2019/07/18/82)**

**[அத்திவரதர்: வரிச்சியூர் செல்வத்துக்கு பாஸ் கொடுத்தது யார்?](https://minnambalam.com/k/2019/07/18/54)**

**[மாசெக்களுக்கு தெரியாமல் உதயநிதி நடத்தும் புது ஆபரேஷன்!](https://minnambalam.com/k/2019/07/18/45)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share