சென்னை எழும்பூரில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தும் கழிப்பறைகள் ‘சுத்தம் செய்யப்படாமல், போதுமான சுகாதார வசதிகள் இல்லாமல் இயங்கிவருகிறது’ என்று காவலர்கள் தந்த செய்திகளின்மூலம், இதுகுறித்த செய்திமின்னம்பலம்.காமில் வெளியானது.
தற்போது, இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு சென்னை எழும்பூரில் உள்ள ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவலர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. இதனால் தற்போது காவலர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றனர். மேலும் இதுகுறித்து, குறிப்பாக பெண் காவலர்கள் அனைவரும் மின்னம்பலத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.�,
+1
+1
+1
+1
+1
+1
+1