கிட்ஸ் ஸ்பெஷல்
விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கான மெனுவைப் பற்றி யோசிப்பதற்குள் சில நேரங்களில் போதும் போதும் என்றாகிவிடும். தினம் ஒரு புதுமையான மெனுவைக் குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி தயாரித்துக் கொடுப்பது உண்மையில் சவாலானது. டென்ஷனே இல்லாமல் குழந்தைகளுக்கான மெனுவை ஆரோக்கியமானதாகவும் புதுமையானதாகவும் தயாரித்துக் கொடுக்கலாம். உதாரணம், இந்த ரெசிப்பி.
**என்ன தேவை?**
துருவிய முட்டைகோஸ் – ஒரு கப்
உருளைக்கிழங்கு – ஒன்று (வேகவைத்து மசிக்கவும்)
பனீர் (துருவியது) – அரை கப்
கொத்தமல்லி இலை – சிறிதளவு
இஞ்சி – பூண்டு – பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்
பிரெட் தூள் – கால் கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
ஒரு பாத்திரத்தில் துருவிய கோஸ், மசித்த உருளைக்கிழங்கு, துருவிய பனீர், கொத்தமல்லி, இஞ்சி – பூண்டு – பச்சை மிளகாய் விழுது, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து பிசையவும். கலவையில் சிறிதளவு எடுத்து நீளவாட்டில் உருட்டிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு, சூடானதும் உருட்டிய கலவையை பிரெட் தூளில் புரட்டி, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். இதற்கு டொமேடோ சாஸ் தொட்டுச் சாப்பிடலாம்.
**என்ன பலன்?**
வளரும் குழந்தைகளுக்குத் தேவையான எல்லா விதமான ஊட்டச்சத்துகளும் நிறைந்தது இந்த ரோல். வழக்கமான உணவுகளைப் போல் இல்லாமல் வித்தியாசமான சுவையில், தோற்றத்தில் இருப்பதால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
[நேற்றைய ரெசிப்பி: திடீர் போண்டா](https://minnambalam.com/k/2019/05/26/6)
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)
**
.
**
[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)
**
.
**
[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)
**
.
**
[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)
**
.
**
[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)
**
.
.
�,”