‘விரதம்’ என்றால் கட்டுப்பாடு என்றும் பொருள். நமக்குப் பிடித்தமான, அவசியமான பொருட்கள் இருந்தும் அவற்றை அனுபவிப்பதைத் தவிர்க்கும் நிலையே விரதம். பொருட்களின் மீது ஆசையைக் குறைந்து பரம்பொருளான இறைவனின் மீது ஈடுபாட்டைக் கொண்டுவரும் முயற்சியே விரத வழிபாடு. உணவு நேரங்களில் இதுதான் வேண்டும் என்று பட்டினி இருக்காமல் இருப்பதைக்கொண்டு பசியைப் போக்க இந்தச் சீரகம் சோம்பு மசாலா அவல் உதவும்.
**என்ன தேவை?**
கெட்டி அவல் – ஒரு கப்
சீரகம், சோம்பு, கடுகு – தலா கால் டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
வறுத்துப் பொடித்த வேர்க்கடலை – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
**எப்படிச் செய்வது?**
கெட்டி அவலை ஊறவிட்டு வடிகட்டவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, சோம்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். இதனுடன் உப்பு, வேர்க்கடலைப் பொடி மற்றும் ஊறிய அவல் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.
**சிறப்பு**
பசியைப் போக்கும். எனர்ஜியைத் தரும்.
[நேற்றைய ரெசிப்பி: பால் பொங்கல்](https://www.minnambalam.com/k/2019/11/26/3/kitchen-keerthana-pal-pongal)�,