நாம் சைனீஸ் பாணி உணவுகளில் மட்டுமே பேபி கார்னைப் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். ஆனால் சூப், சாலட், பாஸ்தா உட்பட பலவகை உணவுகளிலும் பேபி கார்னைச் சேர்க்க முடியும். 100 கிராம் ஸ்வீட் கார்னிலிருந்து 86 கலோரி ஆற்றலைப் பெற முடியும். டிபார்ட்மென்டல் கடைகளில் கிடைக்கும் ஸ்வீட் கார்னை வாங்கி இந்த வித்தியாசமான கபாப்பைச் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்துங்கள்.
**என்ன தேவை?**
வேகவைத்து, உதிர்த்த ஸ்வீட் கார்ன் முத்துகள் – ஒரு கப்
துருவிய காலிஃப்ளவர் – ஒரு கப்
வேர்க்கடலைப்பொடி – 2 டேபிள்ஸ்பூன்
முந்திரிப்பருப்பு – 6
புதினா (அலசி ஆய்ந்தது) – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – கால் கப்
கொத்தமல்லித்தழை (அலசி ஆய்ந்தது) – 2 டேபிள்ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
ரஸ்க் தூள் – 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கவும்)
ரெட் சில்லி சாஸ் – ஒரு டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
**எப்படிச் செய்வது?**
வாணலியில் எண்ணெய்விட்டு சூடானதும் வெங்காயம், காலிஃப்ளவர் சேர்த்து வதக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து கார்ன் போட்டு புதினா, ரெட் சில்லி சாஸ் சேர்த்து வேர்க்கடலைப்பொடி தூவிப் புரட்டி கொத்தமல்லித்தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும். சிறு உருண்டைகளாகப் பிடித்து வடை போல தட்டி, விருப்ப வடிவத்தில் அழுத்தி எடுத்து ரஸ்க் தூளில் புரட்டி எடுக்கவும். எல்லாவற்றையும் இதே மாதிரி செய்து ஃப்ரிட்ஜில் 10 நிமிடங்கள் வைத்து எடுக்கவும். ஒரு பானில் (Pan) கொஞ்சம் எண்ணெய்விட்டு சூடாக்கி, இந்த கார்ன் கபாபை அதில் போட்டு இருபுறமும் வேகவிட்டுப் பொன்னிறமானதும் எடுத்து, அதன் ஒவ்வொன்றின் மேலும் முந்திரிப்பருப்பு வைத்து அலங்கரித்து சாஸ் உடன் பரிமாறவும்.
[நேற்றைய ரெசிப்பி: கிரிஸ்பி கார்ன் ஃப்ரை](https://www.minnambalam.com/k/2020/07/15/3)�,