uகாஞ்சனா ரீமேக்: மீண்டும் இணைகிறாரா லாரன்ஸ்?

Published On:

| By Balaji

காஞ்சனா திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகளில் ஈடுபட்டுவந்த ராகவா லாரன்ஸ் சமீபத்தில் அந்தப் படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தற்போது மீண்டும் அவரை படக்குழுவில் இணைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.

நடன இயக்குநராக திரையுலகில் அறிமுகமான ராகவா லாரன்ஸ் கதாநாயகனாகவும், இயக்குநராகவும் தமிழ்த் திரையுலகில் முத்திரைபதிக்கத் தொடங்கினார். அண்மையில் அவரது இயக்கத்தில் வெளியான காஞ்சனா 3 திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வசூல் சாதனை பெற்றுள்ளது. தமிழில் ஹிட் கொடுத்த லாரன்ஸ் இந்தித் திரையுலகிலும் தடம் பதிக்க தயாரானார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான காஞ்சனா படத்தை இந்தியில் அக்‌ஷய் குமாரை கதாநாயகனாகக் கொண்டு லக்‌ஷிமி பாம் என்ற பெயரில் இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. துஷ்கர் கபூர், ஷபீனா கான் இருவரும் இந்தப் படத்தை தயாரிக்கின்றனர்.

படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அக்‌ஷய் குமார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார். அதில் ராகவா லாரன்ஸின் பெயர் இடம்பெறவில்லை.

இதைத் தொடர்ந்து லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “உலகத்தில் பணத்தை விட மரியாதை தான் முக்கியம், அதனால் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகுகிறேன். படத்தில் இருந்து விலகுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அதை சொல்ல விரும்பவில்லை. ஆனால் முக்கிய காரணம் என்னவென்றால் என்னுடைய அனுமதி இல்லாமல் நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது வேறொருவர் சொல்லி தான் எனக்கு தெரிந்தது. ஒரு இயக்குநருக்கு தெரியாமல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருப்பது வேதனையை அளிக்கிறது.

அந்த போஸ்டர் நன்றாகவும் இல்லை. நான் நினைத்தால் இந்தப் படத்தை எடுக்கவிட முடியாமல் செய்ய முடியும் ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன். அக்‌ஷய் குமார் மீது மரியாதை வைத்திருக்கிறேன். அதனால் இப்படத்தின் கதையை அவரிடம் தருகிறேன். அவர் வேறு யாரையாவது வைத்து எடுத்துகொள்ளலாம். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதைத் தொடர்ந்து படத்தின் தயாரிப்பாளர்கள் லாரன்ஸிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து லாரன்ஸ் வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “சில தினங்களுக்கு முன்பு லக்‌ஷ்மி பாம் படத்திலிருந்து வெளியேறுவது பற்றி தெரிவித்திருந்தேன். அப்போதிருந்தே என்னுடைய ரசிகர்களும், அக்‌ஷய்குமார் சாரின் ரசிகர்களும் இந்தப் படத்தை இயக்குமாறு என்னிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களுடைய அன்பில் நான் திளைத்துப் போனேன்.

ஆனால் உங்களைப் போலவே கடந்த ஒருவாரமாக நானும் வருத்தத்தில் இருக்கிறேன். நீண்ட நாட்களாக இந்தப் படத்தை இயக்க மிகவும் ஆர்வமாக காத்திருந்தேன். இந்தப் படத்துக்காக எனது தேதிகளை ஒதுக்கி, முன் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டேன்.

படத்தின் தயாரிப்பாளர்கள் என்னைச் சந்திப்பதற்காக சென்னை வருகின்றனர். இது இது முழுக்க முழுக்க அவர்கள் கைகளில் தான் இருக்கிறது. என்னுடைய சுயமரியாதைக்கு பாதிப்பில்லாமல் வேலை செய்வதாக இருந்தால் இதுகுறித்து யோசிப்பேன். சந்திப்புக்குப் பின்னர் பார்க்கலாம். இந்த விஷயத்தில் அக்கறை கொண்டிருந்த அனைத்து ரசிகர்களிடமும் இதைத் தெரிவிக்க நினைக்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.

படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் இது குறித்து, “படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளது. அதற்கான முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன” என்று கூறுகின்றனர்.

.

.

**

மேலும் படிக்க

**

.

.

**

[ரயில்வே இணையமைச்சர் ஆகிறார் ரவீந்திரநாத்?](https://minnambalam.com/k/2019/05/26/55)

**

.

**

[அதிமுகவில் ராஜ்யசபா ரேஸ்!](https://minnambalam.com/k/2019/05/26/52)

**

.

.

**

[இடைத்தேர்தல் தோல்வி: நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை](https://minnambalam.com/k/2019/05/26/32)

**

.

**

[திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தி!](https://minnambalam.com/k/2019/05/26/41)

**

.

.

**

[வாக்குகளை வழிப்பறி செய்துள்ளது திமுக அணி: ராமதாஸ்](https://minnambalam.com/k/2019/05/26/35)

**

.

.�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share