uகல்விக் கொள்கை: கமலுக்கு நன்றி சொன்ன சூர்யா

public

புதிய கல்விக் கொள்கை தொடர்பான விவகாரத்தில் தனக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார் நடிகர் சூர்யா.

சென்னை சாலிகிராமத்தில் அகரம் பவுண்டேஷன் சார்பாக ஜூலை 13ஆம் தேதி நடந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா, புதிய கல்விக் கொள்கை வரைவில் இடம்பெற்றுள்ள அம்சங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும் நீட் தேர்வையும் விமர்சித்திருந்தார். இதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை, ஹெச்.ராஜா, அமைச்சர் கடம்பூர் ராஜு ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு சூர்யாவையும் விமர்சித்தனர். மறுபக்கம் தினகரன், அன்புமணி, கமல்ஹாசன், பா.ரஞ்சித் என சூர்யாவுக்கு அரசியல் தலைவர்கள், திரை நட்சத்திரங்களின் ஆதரவு பெருகியது.

இதுதொடர்பாக நாம் நேற்றைய [டிஜிட்டல் திண்ணையில்](https://minnambalam.com/k/2019/07/17/80), “அகரம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளிநாட்டுக்குச் சென்றுள்ள சூர்யா, தனது கருத்துக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் வரும் கருத்துகளை எல்லாம் தனக்குத் தொகுத்து அனுப்புமாறு சென்னையிலுள்ள தனது குழுவினரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். தனக்கு ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்ட திரைப் புள்ளிகள், அரசியல் தலைவர்கள் ஆகியோருக்கு தன் சார்பில் நேரில் சென்று நன்றிக் கடிதத்தைச் சேர்ப்பிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார் சூர்யா. அதன்படி சூர்யாவின் பிரதிநிதிகள் இந்த வேலையில் இறங்கியிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து நேற்று (ஜூலை 17) கடிதம் எழுதியிருக்கிறார் சூர்யா. அகரம் பவுண்டேஷன் லெட்டர் பேடில் வெளியிடப்பட்டுள்ள அந்த கடிதத்தில், “வணக்கத்திற்குரிய கமல்ஹாசன் அவர்களுக்கு, கல்விக் கொள்கை தொடர்பாக என் கருத்துக்கு வந்த எதிர்வினைகளுக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் குரல் எழுப்பிய தங்களுக்கும் தங்கள் ‘மக்கள் நீதி மய்யம்” அமைப்புக்கும் என்னுடைய நன்றி. திரையுலகில் என் போன்ற பல கலைஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் தங்களின் ஆதரவு கல்விப் பணியில் தொடர்ந்து செயலாற்ற ஊக்கம் அளிக்கிறது. தங்களின் தார்மீக ஆதரவுக்கு மீண்டும் எனது நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[டிஜிட்டல் திண்ணை: கிராம சபைகளைக் குறிவைக்கும் சூர்யா](https://minnambalam.com/k/2019/07/17/80)**

**[ வைகோ எம்.பி.யாக சுப்பிரமணியன் சுவாமி எதிர்ப்பு!](https://minnambalam.com/k/2019/07/17/51)**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *