�நேற்று ( ஜூலை 18) மதுரையில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இருந்து வெளியேறிய பயணிகளை வழக்கமான முறையில் அதிகாரிகள் சோதித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு டிப் டாப் ஆசாமியின் சூட்கேசை சோதனையிட்டபோது, அதில் பள பளவென ஐம்பது லட்சம் ரூபாய் பணம் இருந்திருக்கிறது. என்ன ஏதென அதிகாரிகள் விசாரிக்க, ‘தான் கூட்டுறவுத் துறையின் மிக முக்கிய உயரதிகாரி’ என்பதைச் சொல்லியிருக்கிறார் அவர்.
விஷயம் உயரதிகாரிகளுக்குப் போய் முதல்வர் வரைக்கும் சென்றது. அவர் கூட்டுறவுத் துறை உயரதிகாரிதான் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த விவகாரத்தைப் பெரிதாக்க வேண்டாம் என்று சென்னையில் இருந்து டெல்லிக்கும் பேசப்பட்டது.
சில மணி நேரப் பேச்சுவார்த்தையின் முடிவில் அந்த அதிகாரியை விட்டுவிடுவது என்றும், அந்த அதிகாரிக்கு பதிலாக அவர் கூடவந்த இன்னொரு உறவினரை விசாரணை செய்வது என்றும் முடிவெடுத்து விஷயம் அமைதியாக முடிக்கப்பட்டது.
அந்த அதிகாரி கொண்டுவந்த பணம் யாருக்காக, எதற்காக என்பதுதான் இப்போது ஏர்போர்ட் வட்டாரத்தில் பேச்சாக இருக்கிறது. கூட்டுறவுத் துறை அமைச்சரும் மதுரை என்பதால் விஷயம் வேறு மாதிரி பேசப்படுகிறது.�,