uஉத்தராகண்ட்: ரத்த மாதிரியைச் சுமந்த ட்ரோன்!

Published On:

| By Balaji

உத்தராகண்ட் மாநிலத்தில் 30 கிலோமீட்டர் தொலைவுள்ள இரண்டு மருத்துவமனைகள் இடையே ட்ரோன் மூலமாக ரத்த மாதிரி கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

மருத்துவப் பரிசோதனைகளுக்கு ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்களைப் பயன்படுத்துவது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில், நேற்று (ஜூன் 7) உத்தராகண்ட் மாநிலம் நந்தகான் மாவட்ட மருத்துவமனையில் இருந்து தெஹ்ரி எனுமிடத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரத்த மாதிரியொன்று ட்ரோன் மூலமாக அனுப்பப்பட்டது. 30 கிலோமீட்டர் இடைவெளியுள்ள தொலைவைக் கடக்க வெறும் 18 நிமிடங்களே ஆகியுள்ளது.

இதனால், மணிக்கு 100 கி.மீ. வேகத்தில் ட்ரோன் பயணிக்கவல்லது என்று தெரிய வந்துள்ளது. போக்குவரத்து வசதியில்லாத இடங்களில் வசிக்கும் நோயாளிகளுக்கு இவ்வசதியால் பலன் கிடைக்கும் என்று தெஹ்ரி சுகாதார நிலையத்திலுள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் சாலைப் போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள நிலையில், ட்ரோன் சோதனையின் வெற்றி பல மாற்றங்களைக் கொண்டுவருமென்று கருதப்படுகிறது. அங்கு மேலும் பல ட்ரோன்கள் பயன்படுத்தும் திட்டமிருப்பதாகத் தெரிவித்துள்ளனர் அதிகாரிகள். 500 கிராம் எடை கொண்ட இந்த ட்ரோன்கள் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் பறக்கவல்லவை.

சிடிஎஸ் ஸ்பேஸ் ரோபாடிக்ஸ் லிமிடெட் எனும் நிறுவனம் ட்ரோன்களைத் தயாரித்துள்ளது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் நிகில் உபாத்யாய் ஐஐடியில் படித்தவர் ஆவார்.

**

மேலும் படிக்க

**

**

[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)

**

**

[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)

**

**

[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)

**

**

[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)

**

**

[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share