உடற்பயிற்சி செய்யாததால் வெயிலில் நிற்குமாறு தண்டிக்கப்பட்ட சிறுமி மயக்கமடைந்தார். தீவிர சிகிச்சையளித்தும் பலனில்லாமல் அந்த சிறுமி மரணமடைந்ததையடுத்து, அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூரைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். உடற்பயிற்சி ஆசிரியராக இவர் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பெயர் நித்தியகமலா. நேற்று (மே 20) மதியம் 12 மணியளவில் தன் குழந்தை லத்திகாஸ்ரீயைத் தூக்கிக் கொண்டு அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றார் நித்தியகமலா. வீட்டில் பாடம் படிக்கவில்லை என்பதால் குழந்தையை அடித்து வெயிலில் நிற்க வைத்துத் தண்டனை அளித்ததாகவும், வெயில் தாங்காமல் தனது மகள் மயக்கமடைந்துவிட்டாள் எனவும் கூறியுள்ளார். சிறுமி லத்திகாஸ்ரீயின் உடல்நிலை மோசமானதால், அவர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சேலம் மருத்துவமனை மருத்துவர்கள் லத்திகாஸ்ரீயைச் சோதித்தபோது, அவரது முதுகில் ரத்தக்காயங்கள் இருந்தது பற்றி நித்தியகமலாவிடம் கேட்டுள்ளனர். அதற்கு, குழந்தை படிக்காததால் தான் தண்டனை அளித்ததாக அவர் கூறியுள்ளார். தீவிர சிகிச்சையளித்தும் பலனில்லாமல், நேற்று லத்திகாஸ்ரீ உயிரிழந்தார். இதையடுத்து, காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கோடை விடுமுறையில் குழந்தையைப் படிக்குமாறு துன்புறுத்துவதற்கு என்ன அவசியம் என்று போலீசார் நித்தியகமலாவிடம் கேட்டனர்.
நித்தியகமலாவின் இரண்டாவது கணவர் முத்துபாண்டியன் என்பதும், முதல் கணவர் பிரசன்னாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் குழந்தை லத்திகாஸ்ரீயை அழைத்துக்கொண்டு அவர் தனியே வந்ததும், போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
உடற்பயிற்சி ஆசிரியரான முத்துபாண்டியன் குழந்தை லத்திகாஸ்ரீயைக் கடினமான உடற்பயிற்சிகள் செய்யுமாறு வற்புறுத்துவது வழக்கம். நேற்று அது போன்று உடற்பயிற்சி செய்யச் சொன்னபோது லத்திகாஸ்ரீ மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த முத்துப்பாண்டியன், அவரைத் தென்னை மட்டையால் தாக்கியுள்ளார். அதன்பின் வெயிலில் நிற்கவைத்துள்ளார். வெளியே சென்ற நித்தியகமலா வீடு திரும்பியபோது, லத்திகாஸ்ரீ மயங்கிக் கிடந்ததைக் கண்டு பதறியுள்ளார். மருத்துவமனைக்கு அவரைத் தூக்கிச் சென்றுள்ளார். நித்தியகமலாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் முத்துப்பாண்டியனைக் கைது செய்தனர் போலீசார்.
தற்போது முத்துபாண்டியன், நித்தியகமலா இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமி மரணத்தின் பின்னணியில் வேறு காரணங்கள் உள்ளனவா என்று போலீசார் விசாரணையைத் தொடர்ந்து வருகின்றனர்.
.
.
**
மேலும் படிக்க
**
.
. **
[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)
**
.
**
[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)
**
.
**
[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)
**
.
**
[சென்னை: மனிதப் பிழையால் உருவான தண்ணீர்ப் பஞ்சம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/9)
**
.
.
�,”