கார்த்தி நடிக்கும் தேவ் படத்தின் படப்பிடிப்பிற்காக படக்குழு உக்ரைன் செல்லவுள்ளது.
தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் முதன்முறையாக கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடித்திருந்தனர். அந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் ரஜத் ரவிசங்கர் இயக்கும் ‘தேவ்’ என்ற புதிய படத்தில் இணைந்தனர்.
மார்ச் 8ஆம் தேதி சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றது. இரண்டாம்கட்டப் படப்பிடிப்பு ஜூன் 1ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கியது. தொடர்ந்து அமெரிக்கா, மும்பை, இமயமலை ஆகிய பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்தப் படக்குழு திட்டமிட்டிருந்தது.
பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே விக்னேஷ், அம்ருதா, ரேணுகா உள்படப் பலர் நடிக்கின்றனர். ஐம்பது சதவிகிதம் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, படக்குழு உக்ரைன் நாட்டில் படப்பிடிப்பு நடத்தவுள்ளது.
முதன்முறையாக கார்த்தி நடிக்கும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார். கபிலன், தாமரை, விவேக் ஆகியோர் பாடல்கள் எழுதுகின்றனர். ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் கடைக்குட்டி சிங்கம் படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் படத்தின் [மூன்று நிமிடக் காட்சியை](https://www.youtube.com/watch?v=d_ooNWUIW6U&feature=youtu.be) கார்த்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று (ஜூலை 11) வெளியிட்டார். சாயிஷா, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்.�,